ஏ.ஐ., அச்சத்தால் சரிந்த ஐ.டி., பங்குகள்: ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி 'அவுட்'

1

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம், பங்குச்சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.


இதன் காரணமாக, நிப்டி ஐ.டி., குறியீடு இந்த வாரத்தில் 8 சதவீதம் சரிந்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்த ஆண்டில் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி.


இன்போசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்.டெக்., போன்ற நிறுவனங்களின் பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன. இது ஒட்டுமொத்த நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் ஒரு சதவீதம் வரை குறைய முக்கிய காரணமாக அமைந்தது.


இருப்பினும், நிப்டி ஐ.டி., குறியீடு, நேற்றைய வர்த்தகத்தின் இடையே காணப்பட்ட அதன் குறைந்தபட்ச நிலையில் இருந்து 4 சதவீதத்துக்கும் மேல் மீட்சியடைந்தது.


அமெரிக்க நிறுவனமான ஆந்த்ரோபிக், 'கிளாடு கோ-ஒர்க்' என்ற புதிய ஏ.ஐ.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ஆவணங்களை கையாள்வது, அலுவலக பணிகளை தானாகவே மேற்கொள்வது போன்றவற்றை செய்யும் திறன் கொண்டது. இதனால், இந்திய ஐ.டி., நிறுவனங்கள் செய்து வரும் அடிப்படை பணிகளை, இனி ஏ.ஐ., தொழில்நுட்பமே செய்துவிடும் என்பதால், இத்துறைக்கு வருவாய் குறையும் என்ற பயமே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
Latest Tamil News
@block_Y@ டி.சி.எஸ்., நிறுவன பங்குகள் அதன் உச்ச விலையில் இருந்து 44 சதவீதம் சரிந்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 4,592 ரூபாயாக இருந்த நிலையில், நேற்றைய வர்த்தக முடிவில் 2,692 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, 5 ஆண்டுகளுக்கும் மேலான மிக குறைந்த விலையாகும்.block_Y

@block_B@ ஏ.ஐ., தொழில்நுட்பம், மோசடிகளை கண்டறிய உதவினாலும், அது வெளிப்படைத்தன்மையற்ற சூழலையும், ஒரு சிலரின் தொழில்நுட்ப ஆதிக்கத்தையும் உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. எனவே, இனி நிறுவனங்களை மட்டும் கண்காணிப்பதோடு நின்றுவிடாமல், அவை பயன்படுத்தும் 'தொழில்நுட்ப கட்டமைப்புகளை' கண்காணிப்பதே செபியின் முதன்மை பணியாக இருக்கும். சந்தை விதிமுறைகள் இனி நிகழ்வுகளுக்கு பின்னால் வராமல், வரப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே கணித்து செயல்படும் வகையில் அமையும்.


- துஹின் காந்தா பாண்டே, தலைவர், செபி.block_B
Latest Tamil News
@block_G@ ஐ.டி., துறையில் தற்போதைய சரிவு என்பது உலகளாவிய காரணங்களால் ஏற்பட்ட தற்காலிக மாற்றமே தவிர, நிறுவனங்களின் அடிப்படை பலவீனம் அல்ல. இது, 2000ம் ஆண்டு டாட் - காம் பபுள், 2008ம் ஆண்டு நிதி நெருக்கடி போல இது பெரிய அழிவு அல்ல; மாறாக, இணையம் மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை தொடர்ந்து ஏ.ஐ., உருவாக்கப்போகும் அடுத்தக்கட்ட வளர்ச்சி அலைக்கான ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. எனவே, மொத்த முதலீட்டையும் ஒரே நேரத்தில் செய்யாமல், சந்தை இறங்கும் போதெல்லாம் தரமான ஐ.டி., பங்குகளை சிறுக சிறுக சேர்ப்பது சிறந்தது. 2 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களுக்கு, இந்த சரிவு ஒரு மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்பு.


- நரேஷ் குமார், ஆராய்ச்சி பிரிவு தலைவர் (இந்தியா) ஏற்றம் டிரேட்ஸ்block_G

Advertisement