பெங்களூரு அருகே கோர விபத்து; 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி 

6

பெங்களூரு: பெங்களூரு அருகே, பைக் மற்றும் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதிய விபத்தில், ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகரில், ஹொஸ்கோட் தாலுகா சத்யவாரா கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, கார் ஒன்று வேகமாக சென்றது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் தறிகெட்டு ஓடி, முன்னால் சென்ற பைக் மீது மோதியதுடன், பைக்கிற்கு முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்திலும் மோதியது.

அத்துடன், 100 மீட்டர் துாரம் முன்னோக்கி சென்று தடுப்பு சுவரில் மோதி நின்றது. கார் மோதிய வேகத்தில், லாரியின் பின்பக்க இரண்டு டயர்களும் கழன்று ஓடின. சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

நண்பர்கள் பைக்கில் சென்ற வாலிபரும், காருக்குள் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள், காரில் பயணித்த கேரளா மற்றும் பெங்களூரை சேர்ந்த அஸ்வின் நாயர், 17, ஈதன் ஜார்ஜ், 17, அயன் அலி, 17, அர்ஹான் ஷெரீப், 17, பர்ஹான், 17, பரத், 18 என்பதும், இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

பைக்கில் சென்றவர், தேவனஹள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ககன், 26. ஏழு பேரின் உடல்களும் ஹொஸ்கோட் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரே மகன்



வி பத்து குறித்து எஸ்.பி., சந்திரகாந்த் கூறியதாவது:

விபத்தில் இறந்த அஸ்வின் நாயரும், ஈதன் ஜார்ஜும் ஒரே கல்லுாரியில் படித்தவர்கள். இவர்களுக்கும், மற்ற நான்கு பேருக்கும் பொது வான நண்பர்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய கார் அயன் அலிக்கு சொந்தமானது. ஹொஸ்கோட்டில் இருந்து தேவனஹள்ளி நோக்கி சென்ற போது, கார் விபத்தில் சிக்கி உள்ளது.

இவ்வாறு அவ ர் கூறினார்.

விபத்தில் இறந்த ககன், வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பியவர்; திருமணமாகாத அவர், பெற்றோருக்கு ஒரே மகன்.

Advertisement