துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...
சொந்தமாக வீடு கட்டுவதற்காக திட்டமிடும் நிலையில் அதன் உறுதி, தரம் தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஆனால், பணிகள் துவங்கி நடக்கும் நிலையில் சில சூழ்நிலைகள் காரணமாக இதில் கவனக்குறைவு ஏற்பட்டுவிடுகிறது.
ஒப்பந்ததாரர், பணியாளர்கள் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு வகையில் காரணமாக அமைந்துவிடுகிறது. வீட்டுக்கான பணிகள் தரம் குறைவாக அமைய வேண்டும் என்று எந்த ஒப்பந்ததாரரும், பணியாளரும் நினைக்க மாட்டார்கள்.
இது உண்மை தான் என்றாலும், பொருட்களை கையாளும் நிலையில் சில சமயங்களில் கவனக் குறைவு ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக, கட்டடத்தில் ஒவ்வொரு பாகத்துக்கான பணிகளையும் உரிமையாளர் கவனிக்க வேண்டும்.
இதில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமாக உள்ள அஸ்திவார துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றில் கம்பிகள், தாங்கு பலகைகள், கான்கிரீட் ஆகியவற்றில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் நீராற்றும் விஷயத்தில் பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.
அஸ்திவாரம் அமைப்பது முதல் மேல் தளம் வரை துாண்கள், பீம்கள் கட்டும் போது அதில் போடப்படும் கான்கிரீட் முறையாக கியூரிங் எனப்படும் நீராற்றப்பட வேண்டும். இந்த பாகங்களில் கான்கிரீட் போட்டதில் இருந்து, 20 நாட்களுக்கு அதன் மேல் எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது.
முதல் ஐந்து நாட்கள் கழித்து தடுப்பு பலகைகள் அகற்றப்படுவது சரியாக இருக்கும். அதன் பின் அதில் தண்ணீர் ஊற்றி நீராற்றுவதில் தான் பலரும் தவறு செய்வதாக பல்வேறு கட்டடங்களில் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கும் போது தெரியவருகிறது.
இதில் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் துாண்கள் மீது காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ேஹாஸ் குழாய்களை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இவ்வாறு தெளிக்கப்படும் தண்ணீர் சில நிமிடங்கள் தான் அங்கு இருக்கும்.
உண்மையில், தடுப்பு அமைப்புகள் அகற்றப்பட்ட பின்னர், சணல் சாக்கு பைகளை வாங்கி துாண்களின் மீது சுற்றி, கயிறால் கட்ட வேண்டும். இதன் மேல் தண்ணீர் ஊற்றினால், அது சில மணி நேரம் ஈரமாக இருக்கும் என்பதால் கியூரிங் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு சாக்கு பைகளை கட்டி, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். இதை பணியாளர்கள் முறையாக செய்வதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
மேலும்
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்
-
ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை