சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
வீ டு, மனை வாங்க வேண்டும் என்றால் தனியார் நிறுவனங்களை நாடுவது தான் மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதில் அரசு துறை நிறுவனங்கள் சார்பில் பல்வேறு வகையில் வீடு, மனை விற்பனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
அரசு துறை நிறுவனங்கள் என்றால் வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் தான் மக்களுக்கு நினைவுக்கு வருகிறது. இதற்கு அப்பால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களின் கவனத்துக்கு வருவதில்லை.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில், பல்வேறு வகையான குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, வீட்டுக்கடன் வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வீட்டுவசதி சங்கங்கள் சார்பில் செயல்படுத்தப்படும் குடியிருப்பு திட்டங்கள் அதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. ஆனால், தற்போது இந்த விஷயத்தில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் பெரிய அளவில் குடியிருப்பு திட்டங்களை குறிப்பிட்ட சில கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுத்துகின்றன. இந்த திட்டங்களில் வீடு அல்லது மனைகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
இதில் புதிதாக ஒருவர் வீடு, மனை வாங்க முன்வரும் நிலையில் அவரை புதிய உறுப்பினராக சேர்த்து கொள்ளும் வகையில் நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த சங்கங்கள் வில்லங்கம் இல்லாத நிலத்தை வாங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்கின்றன.
இது போன்ற சங்கங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு சலுகைகளை இதற்காக வழங்கி வருகிறது. தனியார் வங்கிகள் போன்று வீட்டுக்கடன் வழங்குவதில் கடுமை காட்டாமல் எளிய நடைமுறைகளை இந்த சங்கங்கள் கடைபிடிக்கின்றன.
இது போன்ற சங்கங்களின் திட்டங்களில் வீடு, மனை வாங்கும் நிலையில், பத்திரப்பதிவில் முத்திரை தீர்வை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. பதிவு கட்டணமாக, சொத்தின் மதிப்பில், 2 சதவீத தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்பதால், 7 சதவீத தொகை மக்களுக்கு மிச்சமாகிறது.
இந்த சலுகைகளை பொது மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் இந்த சங்கங்களின் செயல்பாடுகளை நவீனமுறைக்கு மாற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,
where is in coimbatoreமேலும்
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்
-
ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை