ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
புதுடில்லி: ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பொய்களைச் சொல்லி விவசாயிகளை தவறாக வழிநடத்த அவர் முயற்சி செய்து வருகிறார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பொய்களைச் சொல்லி விவசாயிகளை தவறாக வழிநடத்த அவர் முயற்சி செய்து வருகிறார். நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் அவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவார்கள்? பிரதமர் மோடி விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நொடியும் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளார். விவசாயிகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து அவர்களது வாழ்க்கையை மாற்றியுள்ளார். விவசாயிகளுக்காகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் தொடர்ந்து பாடுபடுவார். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
அதேபோல், மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்துள்ளது. அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்துள்ளோம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ராகுல் இன்று ஒரு நாடகக் கலைஞராகவும், போலியான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகளை இடைவிடாமல் கூறி வருவது அம்பலம் ஆகியுள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
தெலுங்கானா மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து செய்தியை காணோம்
கிருஷ்ணா...செய்தி இருக்கு. ஓட்டு திருட்டு மூலம் பெற்ற வெற்றி தானே...
தண்டிக்காமல் திருந்த மாட்டார் உங்களிடம் உண்மை இருந்தால் தண்டிக்க முயற்சி செய்யுங்கள்
ராகுல் சொல்வது பொய்யா உண்மையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் .
கோகுல மக்களுக்கு தெரியும் ராகுல் ஒரு பொய்யர் என்று...நீ எதற்கு வீணாக முட்டு.குடுகிறாய்
வடக்கே ராகுல் தெற்கே ஸ்டாலின் என இருதுருதிலும் பொய் பேச உருவாக்கப்பட்ட ஜென்மங்கள்
அமெரிக்காவிடம் நாட்டை விற்ற பாரதிய ஜனதா கட்சி மந்திரிகள் துரோகிகள்.
இந்திய விரோத திட்டு கொள்ளை கூட்ட கும்பலில் நீயும் ஒருவனோ
திருட்டு திராவிட திடம் தன்மானம் இழந்த
வெளிநாட்டு கைக்கூலி ராகுல் இல்லைனா வெளி நாட்டுல போய் சிறுபான்மையினர் வாழ தகுதி அற்ற நாடு இந்தியான்னு சொல்லி இருப்பானா
ஆதாரங்கள் இருந்தால் நிரூபி சவுகான்.
200 பாலாஜி அவர்களே. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவன், வெளிநாட்டு கை கூலி. உனக்கு ஆதாரம் வேணும்னா போய் உன் irunooru எஜமானர் கிட்ட கேளு
அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி ஸிரோ அதுவும் விவசாய பொருட்களுக்கு வரி ஸிரோ இந்திய பொருட்கள் ஏற்றுமதிக்கு 18 சதா வீதம் ஜவுளி ஏற்றுமதிக்கு நமக்கு 18 ஆனால் பங்களாதேஷ் கு ஸிரோ இதை சொன்னால் ராகுல் பொய் சொல்லுகிறார் .
மதமாறி பப்பு கூறும் பொய்களுக்கு ஒத்து ஊதும் திருட்டு உருட்டு பங்காளாதேஷ் அமெரிககாவீபமிருந்து மூலப்பொருளை பெற்று ஆடைகளாக கொடுக்கிறது. தைக்கூலி மட்டும் தான், மண்டையில மூளையற்ற திருட்டு தத்திகளுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் அதெ பத்தி
வங்கதேசம் காஸ்ட்லி அமெரிக்கன் பருத்தியை இறக்குமதி செய்து அதில் துணிமணி தயாரித்தால்தான் 18 சதவீத அமெரிக்க வரி. நாம் பெரும்பாலும் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்தியை பயன்படுத்துவதால் ஒரே ஒரு சதவீதம் கூடுதல் வரி. நமக்கே லாபம். ஆக உங்களது மிகத்தவறான ஒப்பீடு.
வெக்கமே இல்லாம பொய்.
அமெரிக்கா தன்னுடைய அறிக்கையை சரி செய்து அறிக்கை விட்டாச்சு.
போய் படி. ராகுல் மாதிரி பைத்தியம் சொல்லுவதை உன்ன மாதிரி அரிசிக்கு மதம் மாறியவன் தான் சொல்லுவான்
அது அவரது இயல்பு குணம்
வடிகட்டிய பொய்யர்கள். அவர்களை அடுத்தவர்களை பொய் சொல்லுவதாக வேறு பேச்சு.மேலும்
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்
-
ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி.. இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்; தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை