பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி, காணியாலம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு குவிந்திருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, காணியாலம்பாளையம் செல்லும் ரோட்டில், தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் 'சரக்கு' வாங்கி குடிப்பவர்கள், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவை ரோட்டோரம் வீசி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், துர்நாற்றம் விசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பையை அகற்ற வேண்டும். ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் கழிவு தேங்காதவாறும் கண்காணிக்க வேண்டும். மேலும், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு