ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு

'ஹெச் .டி.எப்.சி., பிளெக்ஸிகேப் பண்டு', நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிஇருக்கிறது. சமீபகாலமாக, ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.


மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்ப, பல்வேறு பிரிவுகளில், அதாவது லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலீடு செய்யும் வசதி இதில் இருப்பதால், இந்த வகை பண்டுகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்டு, தனது முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் வருமானத்தை ஈட்டி தருவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

Advertisement