டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 336 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.34 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.88 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
Latest Tamil News

19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.68 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு, அதிகபட்சமாக 3.31 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.


வர்த்தகம் நடந்த 3,248 பங்குகளில், 762 ஏற்றத்துடனும்; 2,387 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் கரெக் ஷனுக்குள் சென்று விட்ட நிலைமை, டெக்னிக்கலாக தென்படுகிறது. 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறவடைந்துள்ளது.
Latest Tamil News

25,200-ல் இருக்கும் 200 நாள் இ.எம்.ஏ-.,தான் அடுத்ததாக இருக்கும் ஒரு நல்ல சப்போர்ட் லெவல் என்ற நிலையே தற்போது உள்ளது. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் நியுட்ரல் முதல் சிறிதளவு பியரிஷ் என்ற நிலையையே காட்டுவதால், திசைதெரியா நிலையையோ, அல்லது இறக்கத்தையோ எதிர்பார்க்கலாம்.

Advertisement