பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது

2


கரூர்: குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை. இவர் தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் என்பவர் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவக்குமாரிடம் விவசாயி சின்னத்துரை வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


@block_G@

அனுப்புங்கள் வாசகர்களே!

லஞ்சப் பேர் வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். இப்பகுதிக்கு தகவல் தெரிவிக்கும் வாசகர் பெயர், பிற விவரங்கள் வெளியாகாது. ரகசியம் காக்கப்படும். 'எனது பெயரை வெளியிடலாம்' என, துணிச்சலாகச் சொல்லும் வாசகரின் விவரம் மட்டும் வெளியாகும்.


மறக்காமல் அதையும் கடிதத்திலேயே குறிப்பிடுங்கள். e-mail:cbereaders@dinamalar.In, 95666 97267 என்ற நம்பரில் வாட்ஸ்அப், அரட்டை செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்பலாம். தபாலில் அனுப்ப... 'லஞ்சம் என்னிடம் பறித்தனர் பகுதி', 'தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை.block_G

Advertisement