ஊடுருவல்காரர்கள் ஓட்டுகள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மம்தா; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
கோல்கட்டா: ஊடுருவல்காரர்களின் பலத்துடன் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார்.
கோல்கட்டாவில் அவர் அளித்த பேட்டி;
மேற்கு வங்கத்தில் கல்வித்துறை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அங்கு ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி இனி தொடரக்கூடாது. இம்முறை மம்தாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். டபுள் இன்ஜின் அரசு வந்த பின்னர், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் மட்டுமே அதிக முன்னுரிமை தரப்படும்.
ஊடுருவல்காரர்களின் ஓட்டுகள் மூலம் மம்தா மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறார். ஆனால், மேற்கு வங்க மக்கள் இம்முறை தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இங்கு நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவார்கள்.
மாநிலத்தில் சட்டத்தின் படி தான் ஆட்சியை நடத்த வேண்டும். யாருடைய நெருக்கடி, அழுத்தம் மூலம் நிர்வாகத்தை நடத்தக்கூடாது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
பிஎஸ்ப் யார் கண்ட்ரோல் ல இருக்கு ....சும்மா காமெடி பண்ணிக்கிட்டு ....
உண்மையாகவே இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடிந்தது ????
பிஜேபி அதிகாரம் இருந்தும் அரசியல் மட்டும் செய்கிறது. ஊடுருவல் மம்தா ஆதரவு. திறந்த எல்லை. இன்தடுப்பது கடினம்.
திரிணாமுல் காங்கிரஸ் மம்தாபானர்ஜியால் முடியாது.
SIR .. மூலம் உள்நாட்டு மக்களின் ஒட்டுக்களையே பிடுங்கி ஆகிவிட்டது அப்புறம் வெளிநாட்டு ஓட்டுகளை வைத்து எப்படி ஜெயிப்பது? மோடிக்கும் ஷாவுக்கும் தான் அந்த ரகசியம் தெரியும்
சின்னப்பா உன் பெயரை எட்டப்பா என்று வைப்பதை சரி...
உன் பெயரில் கூட ஒரு மகா பெரிய காமெடி நடிகர் இருந்தார்மேலும்
-
மீண்டும் கைகுலுக்காத சூர்யா; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ