மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு

4


அவிநாசி : அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், மர்ம பொருள் வெடித்து, கட்டடங்கள் சேதமானதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறைச்சாலை, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உட்பட, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ட் அருகே மாலை, 4:00 மணியளவில், திடீரென பயங்கர வெடித்த சத்தம் கேட்டது. இதனால், தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருந்து கடை, பியூட்டி பார்லர் மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்த மேற்கூரை, ஜன்னல் கண்ணாடிகள் பெயர்ந்து மற்றும் உடைந்து விழுந்தன. தாலுகா ஆபீஸ் காம்பவுண்ட் சுவரும் சேதமானது.


போலீசார் கூறிகையில், 'வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை, அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் போலீசார் ஒப்படைப்பர். மாலை, மது பாட்டில்களை கோர்ட் பணியாளர் தீயிட்டு எரித்தபோது, அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement