போக்சோ வழக்கில் குழந்தையின் நலன்தான் முக்கியம்; ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: 'நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்னையை விசாரிக்கும் போது, குழந்தையின் நலனை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை பயன்படுத்த வேண்டும். குற்றம் புரிந்தவரின் நலனை விட, குழந்தையின் நலனே முக்கியமானது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பகவதிராஜ் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்த்து, பகவதிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: புகார் அளித்ததில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய காரணத்தை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுதாரர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மனுதாரரின் கோரிக்கை எதுவும் இல்லாமல் கீழமை நீதிமன்றம் ஒரே விசாரணையாக சேர்த்து நடத்தியது. இருவரும் ஒரே குற்றத்தை செய்யவில்லை. வெவ்வேறு தேதிகள், நேரம், இடங்களில் சம்பவம் நடந்துள்ளது.
கீழமை நீதிமன்றம் இருவருக்கும் சேர்த்து ஒரே விசாரணையை நடத்தியிருக்கக்கூடாது. இருவரிடமும் ஒரே மாதிரியான கேள்விகள் அடிப்படையில் விசாரணை நடந்துள்ளது. இது மனுதாரருக்கு பாதகமாக முடிந்துள்ளது. சாட்சியங்களில் முரண்பாடுகள், குறைபாடுகள் இருந்தன. மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: இருவரும் பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக ஒரே தன்மையுடைய குற்றம் செய்துள்ளனர். தனித்தனியாக செய்த செயல்களால் சிறுமி பாதிக்கப்பட்டார். ஒரே விசாரணை நடந்ததால், குற்றவாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாலியல் குற்ற வழக்குகளில், மற்றொரு குற்றவாளிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரே விசாரணையை நடத்த முடியும். கீழமை நீதிமன்றத்தில் ஒரே விசாரணை நடந்தபோது, மனுதாரர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணையை இரண்டாக பிரித்து நடத்தினால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இருவரும் ஒரே காலகட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். எனவே, கீழமை நீதிமன்றம் சட்டப்படி ஒரே மாதிரியான கேள்விகளை இருவருக்கும் சரியாக முன்வைத்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்கும் என, கூற முடியாது. தனித்தனி குற்றங்களுக்கு, தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும். இருவருக்கும் தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவில்லை.
ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும். சேர்த்து விசாரித்ததால் மனுதாரருக்கு பாதகமாக முடிந்தது என, அவரது தரப்பு கூறுகிறது. இது ஏற்புடையதல்ல. இரு சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டவர் ஒரே நபர் தான். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் அல்ல. இருவரும் பாதிக்கப்பட்ட நபரின் சூழ்நிலையை பயன்படுத்தி, ஒன்றன் பின் ஒன்றாக குற்றம் புரிந்துள்ளனர்.
நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்னையை விசாரிக்கும்போது,குழந்தையின் நலனை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை பயன்படுத்த வேண்டும். குற்றம் புரிந்தவரின் நலனைவிட, குழந்தையின் நலனே முக்கியமானது. நீதிமன்றத்தின் அணுகுமுறை குழந்தைகளை மையமாக கொண்டிருக்க வேண்டும்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வாய்ப்பும் மறுக்கப்படவில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின், இருவரும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்திருந்தனர். முழு குற்றச்சாட்டுகளும் அவர்களுக்கு எதிராக சரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்த குழப்பமும் இல்லை. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
NOUNBIASED JUSTICE IS MORE IMPORTANT than Complainants etc.
விசாரணை மற்றும் பல மடங்கு வாய்தா, மற்றும் பரோல் கொடுத்து மிக மோசமான செயல்களை நீதித்துறை செய்கிறது. DNA மற்றும் தடயியல் சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் தண்டனை தருவதில் என்ன தயக்கம். சிலர் சம்பாதிப்பதற்கு இதை செய்யவதாகவே தெரிகிறது.
போக்ஸோ வழக்கில் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுகிறார்கள்.. .காரணம் அவர்களது செல்வாக்கு, ஜாமீன் / வளைந்து கொடுக்கும் அநீதித்துறை ......
தீண்டாமை, போக்ஸோ, குடும்ப பிரச்சனை.. போன்றவற்றை முதலில் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும். கட்டணம் இல்லை. மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். நடவடிக்கை நிர்வாக விதி, தணிக்கைக்கு உட்படும். நீதிபதி எளிதில் புரிய முடியும். ஆட்சியர் தீர்வு சரியில்லை என்றால், வழக்கை மன்றம் ஏற்க வேண்டும். மக்கள் தொடர்பில் நேரடியாக வக்கீல், போலீஸ் இல்லாத போது, உண்மை நிலை அறிவது கடினம். போலீஸ் குற்றவாளியை கைது செய்யலாம். வழக்கு கட்டணம், வக்கீல் சேவை கட்டணம் கட்டாயம் என்பதால், முதலில் நிர்வாகம் நடவடிக்கை. முடிவில் நீதிமன்ற தீர்வு.
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிடுவது கூட சிறுவர் சிறுமிகளுக்கு பெரியதொரு பயத்தை உண்டு பண்ணும் என்பதை நீதிமன்றம் மறந்துவிடுவது துரதிஸ்டவசமானது.மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்