'வந்தே மாதரம் சைக்ளோத்தான்' மாமல்லையில் விழிப்புணர்வு
மாமல்லபுரம்: 'வந்தே மாதரம் சைக்ளோத்தான்' பயணம் சென்று, கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும், சி.ஐ.எப்.எஸ்., வீரர்கள், மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளுக்கு வந்தனர்.
சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், நாட்டின் கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு குறித்து, கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த ஜன., 28ம் தேதி, மேற்கு வங்கத்தில்,'வந்தே மாதரம் சைக்ளோத்தான்' பயணத்தை துவக்கினர்.
ஒடிஷா, ஆந்திரா, கர் நாடகா, தமிழகம் வழியே, 6,500 கி.மீ., தொலைவிற்கு, 25 நாட்கள் சைக்கிளில் கடந்து, கேரள மாநிலம், கொச்சியில் பயணத்தை முடிக்கின்றனர்.
தமிழகம் வந்துள்ள இக்குழுவினர், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே, நேற்று மாமல்லபுரம் வந்தனர். கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்து, குழு புகைப்படம் எடுத்து விட்டு, கல்பாக்கத்திற்குச் சென்றனர்.
மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்