ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: 'அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் போட்டித்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 3,274 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடந்து ஏழு மாதங்களாகின்றன.
இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து, பணி நியமன ஆணை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.
ஆனால், எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பின், இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல.
போட்டித்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட்டு, தகுதியானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சென்னையில் மஹா சிவராத்திரி விழா
-
பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவது அரசின் கடமை: பிரதமர் மோடி
-
மீண்டும் கைகுலுக்காத சூர்யா; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா