மஹா சிவராத்திரி முதல் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,15)!

1

நமது நிருபர்



தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 15) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?


@1brஅது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* மஹா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும்.



* தெற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம்.
* சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இன்று (பிப்., 15)வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



* சென்னை கிண்டி சர்தார் பட்டேல் மற்றும் மத்திய கைலாஷ் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் 'எல்' வடிவத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அனல் பறக்க போகுது….!



* இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

* அதேபோல் காலை 11 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் நேபாளம்- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றன.



* சென்னையில் மதியம் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் நமீபியா- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று இரவு நடக்கும் இந்தியா-பாகிஸ்தான்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டி 20 கிரிக்கெட்



ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மதியம் 1.45 மணிக்கு நடக்கும் பெண்கள் முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Advertisement