வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு

பண்ருட்டி: வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமாத சிவராத்திரி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்க காப்பு அலங்காரத்திலும், அம் பாள் பெரியநாயகி வெள்ளி கவசத்தில் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நேற்று மதியம் 12:00 மணி மற்றும் மாலை 4:00 மணிக்கு மூலவருக்கும், சரக்கொன்றை நாதர் சுவாமிக்கும், அம்பாள் பெரியநாயகிக்கு சிறப்பு அபிேஷகம் , ஆராதனைகள் நடந்தன.

இரவு 9:00 மணிக்கு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகளும், நள்ளிரவு 12:00 மணிக்கு லிங்கேஸ்பவருக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடும், தீபாராதனை நடந்தன.

கஜலட்சுமி சன்னதி அருகில் 500 கிலோ அரிசியில் பிரமாண்டமாக சிவபெருமான் உருவம் பொறித்தும் சிறப்பு வழிபாடு நடந்தது.

சரக்கொன்றைநாதருக்கு பக்தர்களே அபிேஷகம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

Advertisement