விதிகளை மீறிய மேற்கு வங்க அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி
புதுடில்லி: சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளில் குளறுபடிகளில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் எடுக்க மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடை நீக்க செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரம்:
முர்ஷிதாபாத் மாவட்டம் 56-சம்சர்கஞ்ச் தொகுதியின் உதவி வேளாண் துறை இயக்குனர் செபூர் ரஹ்மான்
பராக்கா தொகுதி வருவாய் அலுவலர் நிதிஷ் தாஸ்
மயனாகுரி தொகுதி மகளிர் மேம்பாட்டு அலுவலக அதிகாரி தாலியா ராய் சவுத்ரி
சுதி தொகுதியின் உதவி வேளாண் இயக்குனர் முர்ஷித் ஆலம்
கானிங் பூர்போ தொகுதியின் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யஜித் தாஸ், மீன்வள விரிவாக்க அலுவலர் ஜாய்தீப் குண்டு.
தேப்ரா தொகுதியின் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேபாஷிஸ் பிஸ்வாஸ், ஆகியோர் ஆவர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாதாடி வரும் நிலையில், அதிகாரிகள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்கள் என்ன தவறுகள் செய்தார்கள்யென்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஏதோ அவசரத்தில் வெளியிட்டால் போல் உள்ளது.மேலும்
-
இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!
-
காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறி; நயினார் நாகேந்திரன் சந்தேகம்
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தியாவில் நடக்கும் ஏஐ மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரிட்டன்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.960 குறைவு
-
ஏஐ மாநாடு முதல் விறுவிறு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 16)!