இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!
புதுடில்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதனையடுத்து பாகிஸ்தானை கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வைரல் ஆகி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் 10வது டி20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்தத் தொடரில், வங்கதேசம் அணி நீக்கப்பட்டது. அதனால், அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கூறியது. பின்னர் ஐசிசி அதிகாரிகள் நேரில் பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டவே நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது.












போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு பாகிஸ்தானும் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. அந்த அணி 18 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இந்தியா வெற்றி பெற்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 9 முறை இரு அணிகளும் மோதிய நிலையில், இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றது கிடையாது என்ற வரலாறு தொடர்ந்து தக்க வைக்கப்பட்டே வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் இந்திய ரசிகர்கள், சமூக ஊடகங்களில் பாராட்டி கருத்து பதிவிடுகின்றனர். அத்துடன் பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில், பல்வேறு விதமான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஏராளமானோர் கமெண்ட் செய்தும், அதனை மறுபதிவும் செய்து வருகின்றனர். இதனால், இந்தியா பாகிஸ்தான் குறித்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.
வாசகர் கருத்து (10)
SUBRAMANIAN P - chennai,இந்தியா
16 பிப்,2026 - 14:25 Report Abuse
தவறாக எண்ணவேண்டாம். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 பிப்,2026 - 13:41 Report Abuse
அவன் குண்டு வைப்பதில் உள்ள ஆர்வத்தை விளையாட்டில் காட்டுவதில்லை. பாக்கிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நாக்வி, ஆசியா கப்பை திருடிய நபர், விளையாட்டின் பாதியின் போதே மைதானத்தின் இருந்து தப்பி ஓடியதும், பாக்கிஸ்தான் ரசிகர்கள் இலங்கையில், பாகிஸ்தானில் டிவி யை வெருப்பில் உடைத்ததும் இதற்கு சாட்சிகள். வீரர்கள் தரம் அடிப்படையில் தேர்வு செய்யப்படாமல், ஒரு சில வகுப்பு, பாக்கிஸ்தான் பஞ்சாபி மாநிலத்தில் இருந்து மட்டும் தேர்ந்து எடுக்கப்படுவதும் அவன் தோல்விக்கு காரணம். 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
16 பிப்,2026 - 13:09 Report Abuse
இந்தியாவின் வெற்றியை இந்திக் கூட்டணி விரும்புவார்களா? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
16 பிப்,2026 - 12:58 Report Abuse
மீண்டும் மண்ணை கவ்வீட்டாங்க! 0
0
Reply
SUBBU,MADURAI - ,
16 பிப்,2026 - 12:20 Report Abuse
Hardik Pandya is a legend for a reason After bowling 3 dot balls for 4th one he dint even bother to see who is catching the ball because after that he knew Sahibzada Farhan is OUT! 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
16 பிப்,2026 - 11:57 Report Abuse
இதில் கொண்டாட ஏதும் இல்லை. நமக்கு விளையாட்டில் பாகிஸ்தான் போட்டியாளர் இல்லை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகள்தான். நாம் இவர்களிடம் பெற்ற வெற்றியை கொண்டாடலாம். பாகிஸ்தான், நபீபியா, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளிடம் பெற்ற வெற்றி என்பது ஜஸ்ட் லைக் தட் அவ்வளவே. 0
0
KavikumarRam - Indian,இந்தியா
16 பிப்,2026 - 12:23Report Abuse
மற்ற நாடுகளை விட்டு விடுங்கள். ஆனால் இனிமேல் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் ஒவ்வொரு தோல்வியும் நாம் தனிப்பட்ட முறையில் கொண்டாடியே ஆகவேன்றிய ஒன்று. இந்த விஷயத்தில் எந்த நடுநிலை நாடகமும் தேவையில்லை. 0
0
Senthoora - Sydney,இந்தியா
16 பிப்,2026 - 14:19Report Abuse
தீவிரவாதிகளை பகையாளியாக பாருங்க, விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் ஒரு சமாதான புறாவாக பாருங்க, நேற்றைய ஆட்டத்தில் இந்திய பாக்கித்தான் தூதுவர்கள் ஒன்னாக இருந்து சந்தோசமா பேசி விளையாட்டை இலங்கை ஜனாதிபதியுடன் பார்த்தார்கள். இதே போட்டியில் தப்பித்தவறி இந்தியா தோற்றிருந்தால் இந்தியாவில் எத்தனை தீவிரவாதிகள் இந்திய விளையாட்டு வீரர்களின் வீடுகளை எரித்தும், கல் ஏறிந்தும், TV களை உடைத்து, பஸ்களை எரித்தும் இருப்பார்கள், கடந்த காலங்களில் இதுஎல்லாம் நடந்துதானே, 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
16 பிப்,2026 - 11:57 Report Abuse
ஒரு மோசமான மந்திரி மற்றும் கிரிக்கெட் ப்ரெசிடெண்ட். அவர் வந்ததில் இருந்து இந்தியாவுடன் மோசமான நிலையை கொண்டுள்ளார். 0
0
Senthoora - Sydney,இந்தியா
16 பிப்,2026 - 16:23Report Abuse
இப்பதானே RAW வெளிநாடுகளில் , மொஸாட் போல போட்டுத்தள்ளுறாங்க. போட்டு தள்ளவேண்டியதுதானே. 0
0
Reply
மேலும்
-
யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்
-
டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
பிப் 25-26ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி; 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயணம்
-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியா: கேரள அமைச்சர் மழுப்பல்
-
மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல்; 59 பேர் பலி, 25,000 வீடுகள் சேதம்
Advertisement
Advertisement