இந்தியாவில் நடக்கும் ஏஐ மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரிட்டன்

புதுடில்லி: இந்தியாவில் நடக்கும் ஏஐ மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

'இந்தியா ஏஐ இம்பாக்ட் 2026' என்ற மாநாடு டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி, பிப்ரவரி 20ம் தேதி வரை நடக்கிறது. இதோடு, ஏஐ கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில், 19ம் தேதி நடக்கும் முக்கிய அமர்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். திறன்மேம்பாடு, ஏஐ பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட 7 துறைகள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஏஐ மாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் கனிக்ஷா நாராயண் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது.

இந்த ஏஐ மாநாடு குறித்து பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லாம்மி கூறுகையில், " செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) முழு நன்மைகளையும், திறனையும் வெளிக்கொண்டு வருவதற்கு, சர்வதேச பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த மாநாடு வழிவகுத்துள்ளது. எனவே, இது முக்கியமான தருணமாகும். மேலும், வலிமையான பாதுகாப்புத் தரநிலைகளை உருவாக்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது," என்றார்.

Advertisement