காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறி; நயினார் நாகேந்திரன் சந்தேகம்

9

மதுரை: காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கும். சென்னை மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டம் பெரிய மாநாடாக மாறி திமுக ஆட்சிக்கு பெரிய பேரிடியாக அமைந்து இருக்கிறது. தற்போது மதுரையில் மீண்டும் நீதி கேட்டு மார்ச் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் தேஜ கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இதுவும் மாநாடாக அமையும்.

வலுவாக இல்லை



எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜ பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். எந்த கூட்டணி வடிவம் பெறவில்லை? மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். முதல்வர் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்கிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. திமுக ஆட்சி முற்றுபெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசால் ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்யப்படவில்லை. இந்த அரசு எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும். 33 லாக் அப் மரணங்கள் நிகழந்து இருக்கிறது.

யார் மனதும்...!



போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செல்லும் பெண்களையும் ஜாதி ரீதியாக திட்டுகின்றனர். ஒரு போலீஸ்காரர் பெண் அதிகாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்று நினைக்க கூடியவன். விஜய்க்கு கொள்கை இருக்கிறதா? பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி? விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுகிறது. கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். சேலத்திலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். அவர்களுக்கு நல்ல சகுனம் தான். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


@block_P@

1ம் தேதி பார்க்கலாம்!

தேஜ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மார்ச் 1ம் தேதி பார்க்கலாம்'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். block_P

Advertisement