ஏஐ மாநாடு முதல் விறுவிறு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 16)!

1

நமது நிருபர்



தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 16) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த சர்வதேச உச்சிமாநாட்டை புதுடில்லியில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ், 45 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.



* லாரி​களுக்​கான தகு​திச்​சான்​றிதழ் புதுப்​பிப்​புக் கட்​ட​ணத்தை குறைக்க வலி​யுறுத்தி டெல்டா மாவட்​டங்​களில் இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றன.


* தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் பிரிவு கட்டடம் திறப்பு.

2. சென்னை மற்றும் புறநகரில் 16 உழவர் அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

3. ரூ.21 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 தோழி விடுதிகளை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.



* 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


* சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

இன்றைய போட்டிகள்



டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் சுற்றில் இன்று 3 போட்டிகள் நடை பெறுகின்றன.

* டில்லியில் காலை 11 மணிக்கும் நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான்-எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.



* கோல்கட்டாவில் மதியம் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதுகின்றன.


* இலங்கை பல்கேகெலேயில் இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

Advertisement