மயிலாடுதுறை அருகே மூதாட்டி கொலை

நமது நிருபர்



மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.60. இவர் கூலி தொழிலாளி. தனது மனைவி பேபி ராணியுடன், கண்டமங்கலத்தில் உள்ள மாமியார் வசந்தா வீட்டில் தங்கி உள்ளார். இன்று காலை கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் மண்வெட்டியால் தாக்கியதில் பேபி ராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், தடுக்க சென்ற பேபி ராணியின் தாயார் வசந்தா.75. என்பவரையும் பன்னீர்செல்வம் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வசந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேபி ராணி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த பாலையூர் போலீசார் இறந்த வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பன்னீர்செல்வத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement