இண்டி கூட்டணியின் தலைவராக தகுதியானவர் ஸ்டாலின்தான்; மணிசங்கர் அய்யர் கருத்து
திருவனந்தபுரம்: இண்டி கூட்டணிக்கு தலைவராக தகுதி உள்ள நபர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
நேருவுக்கு பின்னர் பிரதமராகும் வாய்ப்பை பெற்றவர் காமராஜர். ஆனால் அவர்(காமராஜர்) எனக்கு ஆங்கிலமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது பிறகு எப்படி என்று மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதே போன்ற சூழலில் தான் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
நாட்டின் பிரதமராக ராகுல் வருவதற்கு, கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கு ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பி வருபவர் அல்ல. கடந்த ஓராண்டாக அவர் பேசி வரும் ஒவ்வொரு விஷயமும், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.
நாட்டுக்கு தேவையான உண்மையான பிரச்னைகளை மட்டுமே கையில் எடுக்கிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலின் துணை நிற்பார். அவரால் கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும், தலைவராக இருக்க தகுதியானவர் அந்த திறன் ஸ்டாலினிடம் மட்டுமே இருக்கிறது. அவர் திறமையாக செயல்படுவார்.
ராகுல் பிரதமராக வருவதற்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார் என்ற பெரிய நற்பண்பு ஸ்டாலினிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன். பின்னால் இருந்து கூட்டணியை தாங்கி பிடிப்பார்.
இன்று காங்கிரஸ் கட்சியில் வெற்றிக்கான பயணம் இருப்பதாக தெரியவில்லை. கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள் கட்சியை வளர்க்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. காங். பொதுச் வசயலாளர் கே.சி. வேணுகோபால் ஒரு ரவுடியை போன்றவர். அவரால் கட்சியை வளர்க்க முடியாது. அவரை படேல் போன்று முன்னிறுத்தும் காங்கிரால் எப்படி வெற்றி பெற முடியும். காங்கிரசானது முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மணிசங்கர் அய்யர் பேசினார்.
ஆனால் அவரது பேச்சை பொருட்படுத்த வேண்டியது இல்லை, அவர் காங்கிரசிலும் இல்லை என்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (55)
vbs manian - hyderabad,இந்தியா
16 பிப்,2026 - 19:37 Report Abuse
மூப்பு காரணமாக பேதலித்து விட்டது. பேசாமல் கழகத்தில் சேர்ந்து விடலாம். 0
0
Reply
ரவீந்திரன் - ,
16 பிப்,2026 - 19:14 Report Abuse
முதலில் இந்தியாவின் சுதந்திர தினம் குடியரசு தினம் எப்போ வருதுன்னு கேளுங்க. அந்த பதிலைக் கேட்டாலே போதும் 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
16 பிப்,2026 - 19:01 Report Abuse
பார்லிமென்ட் கேன்டீன்ல வெயிட்டர் வேலை செய்வதற்கு சரியான ஆள்தான் 0
0
Reply
palaniyappan.s - ,
16 பிப்,2026 - 18:46 Report Abuse
பாவம் விட்டுடுங்க வயசானா சகஜம்தானே 0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
16 பிப்,2026 - 18:39 Report Abuse
திரு. G K மூப்பனார் ஆதரவில் மாநிலத்தில் ஆளும்கட்சியாக அமர்த்த பிறகும் திரு. G K மூப்பனார் அவர்களை பிரதமர் ஆகவிடாமல் கூட்டணிக்கட்சிகளை குழப்பிவிட்டவர்களே தி மு க வினர்தான் என்பதனை மறக்கவேண்டாம். 0
0
Reply
சூர்யா - ,
16 பிப்,2026 - 18:38 Report Abuse
ஒருவருக்கு தமிழ் எழுதப் படிக்க வராது! மற்றவருக்கு எழுதி இருந்தாலும் ஒழுங்கா தமிழ் படிக்க வராது! ஆஹா என்ன பொருத்தம்? இப் பொருத்தம்? 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
16 பிப்,2026 - 18:35 Report Abuse
மணி சங்கர்உண்மை விளம்பி நீங்க மயிலாடுதுறை கொற ங்கு ரெஸ் மன்னர் மட்டும் இல்ல நீங்க மனதளவில் ஒரு உடன்பிறவா சிகப்பு கருப்பு மாமா மன்னர் என ட்ராவிஷா கூட்டங்களில் உங்களுக்கு ஈவேரா விருது கிடைக்க வாய்ப்பு அதிகம். அப்படியே பதியவும் அண்ணாச்சி 0
0
Reply
Raja - ,
16 பிப்,2026 - 18:29 Report Abuse
10 boxes for Iyer 0
0
Reply
dhanavel - ,
16 பிப்,2026 - 18:17 Report Abuse
He knows about the value of our honourable chief minister Thalapathy stalin but Tamilnadu congress blabbering and loose talk... 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
16 பிப்,2026 - 19:11Report Abuse
யோவ் போயா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. இதுல இங்கிலிஷ்லே வேற கமெண்ட். 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
16 பிப்,2026 - 19:21Report Abuse
மிஞ்சிட்டிங்க 0
0
Reply
Sun - ,
16 பிப்,2026 - 18:15 Report Abuse
தமிழக காங்கிரசை உடைக்க ஒரு குள்ளநரி தயாராகி விட்டது! 0
0
Reply
மேலும் 43 கருத்துக்கள்...
மேலும்
-
ஏஐ தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் பேச்சு; டில்லி உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
-
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; மார்ச் 1ல் மதுரை; 6ல் வேலுாரில் பிரசாரம்
-
இஸ்ரேல் பெண் பலாத்கார வழக்கு : 3 பேருக்கு மரண தண்டனை
-
மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்
Advertisement
Advertisement