'கிராண்ட் டிராவல் மேளா'வில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு: கேள்விகளுக்கு நெத்தியடி பதில் கூறி பரிசுகளை அள்ளினர்
சென்னை: 'தினமலர்' நாளிதழ் மற்றும், 'தாமஸ் குக்' டிராவல் ஏஜன்சி சார்பில், 'கிராண்ட் டிராவல் மேளா' சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., கிராண்ட் ஹோட்டலில், நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
சர்வதேச மற்றும் உள்நாடு அளவில் சுற்றுலா செல்ல விரும்புவோர், சிறப்பு சலுகையில் சுற்றுலா செல்வதற்காக, 'கிராண்ட் டிராவல் மேளா'வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதில், நேற்று காலை 10:00 மணி முதலே, 'தினமலர்' நாளிதழ் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஒரு நாள் மட்டுமே நடந்த சிறப்பு சலுகை முன்பதிவில், ஏராளமானோர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தனர்.

சிறப்பு பரிசு
மேளாவில் பங்கேற்றவர்கள், பயண தேதிகள், விசா வழிமுறைகள், இன்சூரன்ஸ், உணவு விருப்பம் உள்ளிட்டவை குறித்து சுற்றுலா நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாடினர்.
மேளாவில் பங்கேற்றவர்களுக்காக, பிரத்யேக, 'கேள்வி - பதில்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், 'தினமலர்' நாளிதழ் குறித்தும், அதில் வெளியான செய்திகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. பலரும் சரியான பதில்களை அளித்து சிறப்பு பரிசுகளை வென்றனர்.
சர்வதேச சுற்றுலா தொகுப்பின் கீழ் வரும், 'யூரோப் ஹாலிடேஸ்' பிரிவில், 'சுவிஸ் பிரெஞ்சு மேஜிக், பியூ சன் யூரோப் - சவுத் மற்றும் கிராண்ட் பார்கெயின் டூர் ஆப் யூரோப்' என, மூன்று பிரிவுகள் இடம் பெற்றிருந்தன.
இவற்றில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், பெல்ஜியம், ஆஸ்திரியா, லீச்சென்ஸ்டீன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றிருந்தன.
இப்பிரிவி ல், எட்டு நாள் முதல் 15 நாட்கள் வரையிலான பயணத் திட்டத்திற்கு, தலா 2.77 லட்சம் முதல் 4.61 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.
'குயிக் ஹாலிடேஸ்' பிரிவில், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா , சீனா என, தேர்வு செய்யும் நாடு மற்றும் நாட்களை பொறுத்து, 1.11 லட்சம் முதல் 1.82 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சுற்றுலா முன்பதிவு செய்தோருக்கு, சொகுசு கப்பல் பயணம் இலவசமாகவும், ஒரு நாள் இலவச தங்குமிடமும் வழங்கப்பட்டது.
கோவா பயணம்
அதேபோல, 'அனுபவமிக்க சுற்றுலா , ஆன்மிக பயணங் கள், இந்தியா மற்றும் அதை சுற்றிலும்' என்ற பிரிவுகளில், 30,000 முதல் 3.97 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணத் தில் சுற்றுலா தொகுப்புகள் இருந்தன.
உள்நாட்டு சுற்றுலாவில், ஹிமாச்சல், நேபாளம் , கைலாஷ், கேரளா, காஷ்மீர், லடாக் உள் ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டது.
இப்பிரிவில் முன்பதிவு செய்வோருடன், ஒரு நபர் இலவசமாக பயணிக்கும் வசதி வழங்கப்பட்டது.
முன்பதிவு செய்தோரில், பம்பர் குலுக்கல் முறையில் தேர்வான ஜோடிக்கு, மூன்று நாள் கோவா பயணம் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.
அதேபோல, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு வாயிலாக, உடனடி தள்ளுபடியாக 15,000 ரூபாய் மற்றும், 'தினமலர்' நாளிதழ் வாசகர்களுக்கு, 30,000 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டன. அவற்றோடு, அமெரிக்க டூரிஸ்டர் பேக் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
'தாமஸ் குக்' டிராவல் ஏஜன்சி மூத்த பொது மேலாளர் அலோக் குமார் தாஸ், முன்பதிவு செய்தோருக்கு, 'பயண அனுமதி அட்டை'கள் வழங்கி வாழ்த்தினார். சுற்றுலா தொடர்பான விபரங்களுக்கு, 88288 90311 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
@block_B@
'தினமலர்' நாளிதழ் மற்றும் 'தாமஸ் குக்' டிராவல் ஏஜன்சி சார்பில் நடந்த, 'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அளித்த பேட்டி:
'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சி புது முயற்சியாக உள்ளது. ஒரே இடத்தில், சுற்றுலா தொடர்பான அனைத்து தகவல்களும் கிடைப்பது வரவேற்கத்தக்கது. பல சுற்றுலாக்கள் சென்றுள்ளோம். தற்போது, சீனாவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்துள்ளோம்.
--குமார், 72, ராதிகா, 67, தம்பதி, மந்தைவெளி, சென்னை
க டந்த 30 ஆண்டுகளுக்கும் மேல், 'தினமலர்' நாளிதழ் வாசகர்களாக உள்ளோம். நாளிதழில் வெளியான விளம்பரத்தை பார்த்து வந்தோம். ஏற்பாடுகள் மனநிறைவாக இருந்தன.
பூவண்ணன், 62, வேதா, 58, தம்பதி, மண்ணிவாக்கம், சென்னை
கடந்த 25 ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாசகர்களாக பயணிக்கிறோம். நல்ல சலுகைகள் வழங்கப்பட்டன. ஐரோப்பா செல்ல முன்பதிவு செய்துள்ளோம். நிபுணர்களின் அணுகுமுறைக்கு வாழ்த்துகள்.
ரமேஷ், 59, சுஜாதா, 51, தம்பதி, சேலையூர், சென்னை
நடுநிலையான பத்திரிகையாக இருப்பதால், 25 ஆண்டுகளுக்கும் மேல், 'தினமலர்' நாளிதழை படித்து வருகிறேன். வாரமலரில் வெளிவரும் 'திண்ணை, அன்புடன் அந்தரங்கம்' என அனைத்தையும் விடாமல் படிப்பேன். முக்கிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். 'மானசரோவர்' சுற்றுலா தொகுப்பு எனக்கு பிடித்திருந்தது. மேளாவில் நிறைய சுற்றுலா திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் மூன்று சுற்றுலா தொகுப்புகள் பிடித்தன. உள்நாட்டு பயணத் திட்டத்தில், கூடுதல் இடங்கள் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சந்திரசேகர், 71, விஜயலட்சுமி, 68, தம்பதி, சாலிகிராமம், சென்னை
block_B
மேலும்
-
ஏஐ தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் பேச்சு; டில்லி உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
-
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; மார்ச் 1ல் மதுரை; 6ல் வேலுாரில் பிரசாரம்
-
இஸ்ரேல் பெண் பலாத்கார வழக்கு : 3 பேருக்கு மரண தண்டனை
-
மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்