ரூ.12 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ராசிபுரம்; ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், ஆர்.கவுண்டம்பாளையம் கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. இதில், ஆர்.சி.எச்., ரகம், 412 மூட்டை, டி.சி.எச்., ரகம், 2 மூட்டை, கொட்டு ரகம், 17 மூட்டை என, மொத்தம், 431 மூட்டை பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில், ஆர்.சி.எச்., ரகம் ஒரு குவிண்டால் அதிக-பட்சம், 8,711 ரூபாய், குறைந்தபட்சம், 7,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டி.சி.எச்., அதிபட்சம், 9,202, கொட்டு ரகம் அதிகபட்சம், 5,499 ரூபாய், குறைந்தபட்சம், 5,539 ரூபாய் என, மொத்தம், 412 மூட்டை பருத்தி, 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement