'சூப்பர்-8' சுற்றில் யார்... யார் *'டி-20' உலக கோப்பை தொடரில்

சென்னை: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் 'குரூப்-1'ல் இடம் பெற்றன. இப்பிரிவின் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன.
'குரூப் 2'ல் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. நான்காவது அணியாக பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா இடம் பெறலாம். இவை இன்று நடக்கும் பாகிஸ்தான்-நமீபியா, தென் ஆப்ரிக்கா-அமெரிக்கா போட்டிக்குப் பின் தெரியவரும்.
பிப். 26ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள 'சூப்பர்-8' சுற்று போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அட்டவணை
தேதி அணிகள் இடம் நேரம்
பிப். 21 நியூசிலாந்து-அமெரிக்கா/பாக்., கொழும்பு இரவு 7:00 மணி
பிப். 22 இலங்கை-இங்கிலாந்து பல்லேகெலே மதியம் 3:00 மணி
பிப். 22 இந்தியா-தென் ஆப்ரிக்கா ஆமதாபாத் இரவு 7:00 மணி
பிப். 23 வெ.இண்டீஸ்-ஜிம்பாப்வே மும்பை இரவு 7:00 மணி
பிப். 24 இங்கிலாந்து-அமெரிக்கா/பாக்., பல்லேகெலே இரவு 7:00 மணி
பிப். 25 இலங்கை-நியூசிலாந்து கொழும்பு இரவு 7:00 மணி
பிப். 26 தென் ஆப்ரிக்கா-வெ.இண்டீஸ் ஆமதாபாத் மதியம் 3:00 மணி
பிப். 26 இந்தியா-ஜிம்பாப்வே சென்னை இரவு 7:00 மணி
பிப். 27 இங்கிலாந்து-நியூசிலாந்து கொழும்பு இரவு 7:00 மணி
பிப். 28 இலங்கை-அமெரிக்கா/பாக்., பல்லேகெலே இரவு 7:00 மணி
மார்ச் 1 தென் ஆப்ரிக்கா-ஜிம்பாப்வே டில்லி மதியம் 3:00 மணி
மார்ச் 1 இந்தியா-வெ.இண்டீஸ் கோல்கட்டா இரவு 7:00 மணி

Advertisement