நேபாளம் முதல் வெற்றி
மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் (சி பிரிவு) ஸ்காட்லாந்து, நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நேபாள அணி பீல்டிங் செய்தது.
ஸ்காட்லாந்து அணிக்கு மைக்கேல் ஜோன்ஸ், முன்சே (27) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜோன்ஸ், 45 பந்தில் 71 ரன் எடுத்து அவுட்டானார். பிரண்டன் மெக்முல்லன் 25 ரன் எடுத்தார். கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் (10) தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர்.
இருப்பினும், ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 170/7 ரன் குவித்தது. நேபாளத்தின் சார்பில் சோம்பால் காமி 3, நந்தன் யாதவ் 2 விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய நேபாள அணிக்கு குஷால் (43), ஆசிப் (33) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் ரோகித் (16), சற்று உதவினார். திபேந்திர சிங் (50*) அரைசதம், குல்சன் (24*) விளாசல் கைகொடுக்க நேபாள அணி 19.2 ஓவரில் 171/3 ரன் எடுத்தது.
'டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்றது.
மேலும்
-
இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை
-
துவங்கியது ஈரான்-அமெரிக்கா பேச்சு; சமரச தீர்வா-போரா: நீடிக்கும் பதற்றம்
-
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கைது
-
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி
-
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
-
தேர்தல் பணியில் களமிறங்கும் ஸ்டாலின் மகளிர் படையினர்