அபிஷேக் நேரம்...ரசிகர்கள் ஆர்வம் * இன்று இந்தியா-நெதர்லாந்து மோதல்
ஆமதாபாத்: இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து மோதுகின்றன. இந்தியா ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து வெளியேறிவிட்டது.
இந்திய ரசிகர்கள் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக 'டக்' அவுட்டானார். வயிறு பிரச்னையால் நமீபியா உடன் விளையாடவில்லை. கடந்த 6 'டி-20' போட்டிகளில் 4ல் 'டக்' அவுட்டாகியுள்ளார். 'பவர் பிளே' ஓவரில் பேட்டை சுழற்றி 'டீப் கவர் பவுண்டரி' திசையில் ரன் சேர்ப்பதே இவரது பலம். இதை அறிந்து சரியான இடத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான் அணிகள் 'பீல்டர்'களை நிறுத்தின. இந்த வலையில் அபிஷேக் சிக்கினார். இன்று சுதாரிக்க வேண்டும். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன் சேர்க்க வேண்டும். இஷான் கிஷான் அருமையான 'பார்மில்' உள்ளார். இவரது விளாசல் தொடரலாம்.
'சுழல்' தடுமாற்றம்
இந்திய முன்னணி பேட்டர்கள் 'ஸ்பின்னர்'களிடம் தடுமாறுகின்றனர். 'சுழலில்' அசத்திய நமீபிய கேப்டன் எராஸ்மஸ், 4 விக்கெட் சாய்த்தார். இதே போல பாகிஸ்தானின் சைம் அயூப், உஸ்மான் தாரிக் தொல்லை கொடுத்தனர். நெதர்லாந்து அணியிலும் ஆர்யன் தத், ரோலப் வான்டர் மெர்வி என இரு 'ஸ்பின்னர்'கள் உள்ளனர். இதனை உணர்ந்து திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே கவனமாக விளையாடினால், இந்தியா தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்யலாம்.
'வேகப்புயல்' பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்படலாம். அர்ஷ்தீப் சிங், சிராஜ் அணிக்கு திரும்பலாம். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளனர். வாஷிங்டன் சுந்தரை களமிறக்கும் திட்டமும் உண்டு.
பேட்டிங் பலவீனம்
நெதர்லாந்தின் பேட்டிங் மோசமாக உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக 103 ரன்னுக்கு சுருண்டு, தோற்றது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், லெவிட், ஆக்கர்மென் கைகொடுக்க வேண்டும்.
மழை வருமா
ஆமதாபாத், மோடி மைதான ஆடுகளத்தில் எளிதாக ரன் குவிக்கலாம்.
* 'டி-20' அரங்கில் இரு அணிகளும் ஒரு முறை மோதின. சிட்னியில் நடந்த 'டி-20' உலக கோப்பை போட்டியில் (2022) இந்திய அணி (179/2), நெதர்லாந்தை (123/9) வீழ்த்தியது.
* ஆமதாபாத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
மேலும்
-
இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை
-
துவங்கியது ஈரான்-அமெரிக்கா பேச்சு; சமரச தீர்வா-போரா: நீடிக்கும் பதற்றம்
-
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கைது
-
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி
-
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
-
தேர்தல் பணியில் களமிறங்கும் ஸ்டாலின் மகளிர் படையினர்