ஜப்பான் முதல் தங்கம் * 'ரவுண்ட் அப்'
மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. ஜப்பானின் ரிகு மியுரா, ரியுச்சி கிஹாரா ஜோடி, மொத்தம் 231.24 புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது. இப்பிரிவில் ஜப்பானுக்கு முதல் தங்கம் வென்று தந்தது.
அனஸ்டாசியா, பெருலாவா ஜோடி, ஜார்ஜியாவுக்கு முதன் முறையாக பதக்கம் (வெள்ளி) வென்று தந்தது. ஜெர்மனியின் மினர்வா, நிகிதா ஜோடிக்கு வெண்கலம் கிடைத்தது. இதுவரை ஜப்பான் அணி 4 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 18 பதக்கத்துடன் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் நார்வே (13 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம்) உள்ளது.
சென்னையில் 'பிக் பாஷ்'
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ளூர் 'பிக் பாஷ்' லீக் 'டி-20', கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 6 முறை கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, 16வது சீசனில் (2026/27) தனது போட்டிகளை இந்தியாவின், சென்னையில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகிகள், சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசித்துள்ளனர். இருப்பினும் இந்திய கிரிக்கெட் போர்டு உட்பட பல அணி நிர்வாகிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
எக்ஸ்டிராஸ்
* சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 7வது நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, துவக்கத்தில் பங்கேற்ற 4 போட்டியிலும் தோற்றது. அடுத்து ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், விலகிக் கொண்டார். ஹர்திக் சிங், புதிய கேப்டனாக செயல்பட உள்ளார்.* துபாயில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, தாய்லாந்தின் பிலிபுச் ஜோடி, 7-5, 6-2 என ஜப்பானின் ஹோசுமி, தைவானின் உயு ஜோடியை வென்றது.
* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை கான்பெராவில் நடக்க உள்ளது.
* டில்லியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், 6-3, 7-5 என ஸ்பெயினின் ஜோர்டாவை வீழ்த்தினார்.
மேலும்
-
இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை
-
துவங்கியது ஈரான்-அமெரிக்கா பேச்சு; சமரச தீர்வா-போரா: நீடிக்கும் பதற்றம்
-
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கைது
-
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி
-
அரசு கல்லுாரி முதுகலை மாணவர்கள் போராட்டம்
-
குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., போட்டி?