நடப்பாண்டு கோடை விழாவுக்கு 10 லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு பணி துவக்கம்
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், நடப்பாண்டின், 128 வது மலர் கண்காட்சிக்காக, பூங்காவில், 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டு வரும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது.
நடப்பாண்டு, 128வது மலர் கண்காட்சியை ஒட்டி, தோட்டக்கலை துறை சார்பில் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து, பல வண்ண மலர் செடிகள் நடவு செய்ய விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நடப்பாண்டு மலர் கண்காட்சிக்கு, 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 275 வகையான விதைகள் மற்றும் செடிகள், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு சீசன் பணிகள் நடந்து வருகிறது.
275 வகை மலர் செடிகள் நடப்பாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய ரகங்களான ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா மற்றும் பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரி கோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோரியா,' உள்ளிட்ட , 275 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று துவங்கிய நடவு கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நவநீதா, துணை இயக்குனர் (பொ) பபீதா, உதவி இயக்குனர்கள் ஜெயந்தி, பைசல் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அ.தி.மு.க.,வில் இணைந்தார் அழகிரி ஆதரவாளர் மன்னன்
-
வாக்குறுதி அளித்து விட்டு அதை காப்பாற்றாமல் இருப்பது சரியா? தமிழக அரசிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேள்வி
-
பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
-
விஜய் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
-
சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
-
பணியாளர்களுக்கு உதவி