விஜய் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
சென்னை: ''சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக சிலர் கனவு காண்கின்றனர்,'' என த.வெ.க., தலைவர் விஜயை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறைமுகமாக தாக்கினார்.
சென்னையில், எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம், ரீ ரிலீஸ் ஆனது. அதை, கட்சியினரோடு, பழனிசாமி நேற்று பார்த்தார். பின் அவர் அளித்த பேட்டி:
சினிமாவில் அரசியலை புகுத்தி, வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நிஜமாகவே, உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்கு வந்தவர். தனது படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்தார்.
ஆனால், தற்போது சிலர், சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக நினைக்கின்றனர். அதையே கனவாகவும் காண்கின்றனர். அக்கனவு ஒருபோதும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா; 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்ததால் பதற்றம்
-
மகா சிவராத்திரி விழா
-
கல்லுாரி வேன்- - லாரி மோதல் மாணவி உட்பட 3 பேர் காயம்
-
பரமக்குடியில் தறி மேடையுடன் சிறிய கைத்தறி பூங்கா ரெடி நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு
-
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த கோரிக்கை பங்குத்தொகை செலுத்தியும் தாமதம் செய்யும் அலுவலர்கள்
-
அறுவடையின் போது வயல்களில் குவியும் வெள்ளை கொக்குகள்
Advertisement
Advertisement