மனுதாரர்கள் தீக்குளிக்க முயற்சி வாரந்தோறும் போலீசார் 'அலர்ட்'
ஊட்டி: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் மனு அளிக்க வருகின்றனர். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் அளித்தும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால், நொந்து போன சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற சம்பவம் ஊட்டியில் அடிக்கடி நடப்பதால், போலீசார் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின் மனுதாரர்களை அனுமதிக்கின்றனர்.
ஊட்டி அருகே , தொட்டன்னி பகுதியை சேர்ந்த பாரதமணி,38, என்பவர் நிலப்பிரச்னை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். வரிசையில் காத்திருந்த பாரத மணி பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை திடீரென எடுத்து, தன் மீது ஊற்ற முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க.,வில் இணைந்தார் அழகிரி ஆதரவாளர் மன்னன்
-
வாக்குறுதி அளித்து விட்டு அதை காப்பாற்றாமல் இருப்பது சரியா? தமிழக அரசிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேள்வி
-
பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
-
விஜய் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
-
சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
-
பணியாளர்களுக்கு உதவி
Advertisement
Advertisement