சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
பெ.நா.பாளையம்: சிவராத்திரி விழாவையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் வேட்டைக்காரசாமி கோவிலில், பாதக்கொரடு அணிந்து பூஜாரி ஊர்வலமாக வந்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர், மகா லட்சுமி கோவில், வீரபத்திர சாமி தொண்டம்மாள் கோவில், வேட்டைக்கார சாமி ஆகிய கோவில்களில், விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை கோவில் உற்சவர்கள், அலங்காரத்துடன் கோவில் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
வேட்டைக்காரசாமி கோவில் பூஜாரி, பாதக்கொரடு எனும் ஆணிகள் உடைய மரத்தாலான பாதரட்சை அணிந்து ஊர்வலமாக வந்தார்.
மலைவாழ் மக்கள், தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, வேட்டைக்கார சுவாமியை வரவேற்றனர். சிறப்பு அன்னதானம், பூஜைகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement