தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணம் வழங்கினால் அது எப்படி நடத்தை விதிமீறலாகும்? ஸ்டாலின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மக்களுக்கு பரிசு பொருட்களோ, பணமோ கொடுத்தால் அது எப்படி தேர்தல் விதிமுறை மீறலாகும்?' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சென்னை, கொளத்துார் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பெற்ற வெற்றி செல்லும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அதிமுகவின் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நடந்தது.
சைதை துரைசாமி சார்பில், வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள்:
கொளத்துார் தொகுதியில் பணம் வினியோகிக்கப்பட்டது. அதேபோல, 'பூத் ஸ்லிப்'பில் சின்னம், பெயர் உள்ளிட்டவை அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. இது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்துள்ளோம். இதே ஆதாரத்தை தான் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து, காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்ய கோரினோம். ஆனால், அவர்கள் செய்யவில்லை.
அதே போல, தொகுதிகுட்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் பணப் பட்டுவாடா நடப்பது அறிந்து, அதிமுக பிரமுகர்கள், அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையின் ஒரு அறை முழுதும் பூட்டப்பட்டிருந்தது. அறையை திறந்தபோது அங்கு பெண்கள் இருந்தனர்; அவர்களிடம் பணமும் இருந்தது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உங்களது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்று பதிவு செய்துள்ளதா? வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, குற்றம் சாட்டப்பட்ட நபர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறுகிறீர்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், மக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ கொடுத்தால் அது எப்படி விதி மீறலாகும்?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பும், பின்பும் ஸ்டாலின் பணம் கொடுத்துள்ளார். அதை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்து கொடுத்துள்ளோம். 'சிடி' டிஜிட்டல் ஆதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், 'ஸ்டாலினின் மனைவி துர்கா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், 'ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக, கொளத்துார் தொகுதி மக்கள் தன்னை அணுகியதாகவும், அந்த வாக்குறுதிகளுக்காக சொந்த பணத்திலிருந்து பணம் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்' என்றும் வாதங்களை முன்வைத்தார்.
ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர், 'சைதை துரைசாமி சொல்லும் ஆதாரங்கள் எதுவும் சட்டப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் தான் சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. 45 நாட்கள் அவகாசம் வழங்கியும், சைதை துரைசாமி தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லக்கூடிய பெயர்கள் வழக்கிற்கு தொடர்பு இல்லாதவைு' என்றார்.
வழக்கின் வாத பிரதிவாதங்கள் நாளையும்(பிப்.18) தொடர்கின்றன.
தேர்தலுக்கு முன் பின் மக்களுக்கு பணம், பரிசு பொருள் காரணம் ஏதும் இல்லாமல் கொடுப்பது குற்றம் இல்லையா,? தேர்தல் நடத்தை விதி என்பது பல் பிடுங்கிய பாம்பு. கத்தி இல்லாத உறை. இதில் நிரூபிப்பது கடினம். வழக்காடி ஜெயிக்க முடியாது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், மக்கள் பிரதிநிதிகளை கட்டு படுத்தும் முழு அதிகாரம் வழங்க வேண்டும். நீதிபதி ஒரு வாக்காளர். தணிக்கை, தேர்தல், பாதுகாப்பு, நிர்வாக குறைபாட்டை தீர்க்கும் இடம் நீதிமன்றம் கிடையாது.?
கொடுப்பது தப்பில்லை என தீர்ப்பு எழுதுங்கள். இல்லாவிட்டால் நாட்டில் அனைவரும் மீசை தாடியுடன் அலைவார்கள்.
அருமையான தீர்ப்பு. Appuram லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும் .ஆறு மாதங்களுக்கு முன்பே சட்டசபையை kalaithu vittu janaathipathi aatchiyai amalpaduththa வேண்டும்
இதற்கு பெயர் நீதி என்றால் கை கொட்டி சிரிப்பார்கள்.
200 ரூபாய் ஊபியாக இருக்கிறார்.
பணமிருப்போர் யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுதும் பரிசுப்பொருள்கள் கொடுக்கலாம். ஏன் எதற்கு என்று நீதிமன்றம் வரக்கூடாது என்பதை நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் விசாரணை அமைப்புக்கள் சரியாக செயல்பட்டு நீதிமன்றத்தில் அசைக்கமுடியாத ஆதாரங்களை சமர்ப்பித்தால் கூட நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
யாரது இந்த நீதிபதி நம்ம ஓசி ஓசி புகழ் பொன்முடிவழக்கில் உடனே பதவி பிரமாணம் செய்துவைக்கணும் என்று ஆளுநருக்கு உத்தரவு போட்ட அதே நீதிபதியா? எதுக்கு கேட்கிறேன் என்றால் அவரு சொன்னா சரியாதான் இருக்கும். யாருக்கு? பொன்முடி போலவே ஸ்டாலினுக்கும்தான்ன்னு சொல்றேன். நல்லா வருவீங்க நீதியரசரே
குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற, தேர்தலுக்குத்தானே பணம் கொடுக்கிறார்கள் ! அதை தேர்தல் தேதி அறிவிக்கும் சில நாள் முன் கொடுத்தால் என்ன? தேர்தல் தேதி அறிவித்த பின் கொடுத்தால் என்ன? தேர்தலில் வெற்றி பெற ,தேர்தலுக்காக எப்போது பணம் கொடுத்தாலும் ,வாங்கினாலும் தப்பு தப்புதானே?
Irresponsible Judges Sabotaging Demoxracyமேலும்
-
ஒரு லட்சம் பேர் வசித்தால் மட்டும் பாதாள சாக்கடை வசதி கிடைக்கும்: அமைச்சர் நேரு திட்டவட்டம்
-
பிரான்ஸ் நிறுவனம் ரூ.2,146 கோடி முதலீடு
-
வாகன தகுதிச்சான்று புதுப்பிப்பு கட்டண உயர்வு ஒத்திவைப்பு
-
கல்வி துறையில் அதிகாரிகள் நியமனம்
-
சரக்குகள் கையாளும் முனையங்கள் 500 ஆக உயர்த்த ரயில்வே இலக்கு
-
புண்ணாக்கு ஏற்றுமதி 42 சதவிகிதம் குறைந்தது