வாகன தகுதிச்சான்று புதுப்பிப்பு கட்டண உயர்வு ஒத்திவைப்பு

சென்னை: மத் திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், அனைத்து வகை வாகனங்களுக்கான, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை, கடந்த ஆண்டு நவ., 11ல் உயர்த்தி உத்தரவிட்டது; இது, டிச.,17 முதல், அமலுக்கு வந்தது. வாகனங்களுக்கு ஏற்றார்போல், கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த கட்டண உயர்வுக்கு, லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கட்டண உயர்வை ரத்து செய்யும்படி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

அதை ஏற்று, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான, எப்.சி., எனப்படும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயர்வை, மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement