சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை
மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விருதுநகர் பாதிரியார் ஜோசப் ராஜாவுக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா, பாதிரியார். இவரது சர்ச்சுக்கு சிறுமி, அவரது தாய் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ஒரு நாள், சிறுமியை ஜோசப் ராஜாவின் பாதுகாப்பில் விட்டு தாய் வெளியில் சென்றார்.
தாய் திரும்பிய போது, ஜோசப் ராஜா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாற்றுத்திறனாளியான அந்த சிறுமி கூறினார். இதையடுத்து, அந்த பாதிரியார் மற்றும் அவரது கு டும்பத்தினர், அந்த தாயிடம் மன்னிப்பு கேட்டனர்.
அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஜோசப் ராஜாவிற்கு ஆயுள் தண்டனை, அதாவது வாழ்நாள் முழுதும் சி றை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, 2023 ஏப்., 20ல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜோசப் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை, நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாலியல் குற்றங்களை புகார் செய்வது எளிது அல்ல. சம்பவம் நடந்ததிலிருந்து புகார் அளிக்க, எட்டு நாட்கள் தாமதம் என்ற மனுதாரர் வாதம், முற்றிலும் ஏற்புடையதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
எனவே , கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.
இவர்களெல்லாம் முறையாக கிறிஸ்தவ இறையியல் பயின்று பாதிரி ஆனவன்கள் அல்ல.. பைபிள் படிக்க இயலும், ஏற்ற இறக்கமாக பேச வரும் என்ற ஒரே காரணத்திற்காக தன்னைத்தானே பாதிரியாக அறிவித்துக் கொண்டவர்..
அண்ணா கட்டுமரம் பிறந்த தேதியில் இந்த கொடூரன் ரிலீஸ் ஆகிவிடுவான் இல்லையென்றால் திருட்டு திமுகவுக்கு சிறுபான்மை ஆட்கள் வோட்டு போட மாட்டார்கள்.
ஆரிய சதி ...
இது போன்ற பாதிரிகளுக்கு அவங்க போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்த திமுக பாவமன்னிப்பு அளித்து விடும். கோவை குண்டுவெடிப்பு கைதிகள் அதே காரணத்துக்காகத்தானே விடுதலை செய்யபட்டனர்?
இவனுக சொல்லும் எல்லாருக்கும் சமாதானம், பரலோக ராஜ்யம் என்பது இதுதானா? என்ன வேஷம் போடறானுக? உள்ளே எல்லாம் கழிவாக இருக்கே..
சிறுமியின் தாய் ஏன் சிறுமியை ஒரு ஆணின் பாதுகாப்பில் விட்டுவிட்டு செல்ல வேண்டும்? அந்த தாய்க்கு வேறு உறவினர்களே கிடையாதா? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றத்தான் செய்யும். வருமுன் காப்பதுதான் நல்லது. எல்லாம் முடிந்தபிறகு வருத்தப்பட்டு என்ன பயன்? ஆண் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரோ அல்லது இந்து சாமியாரோ அல்லாது இஸ்லாமிய லெப்பையோ அது விஷயம் அல்ல. ஆண் எப்போதும் ஆண் தான். சமயமும் சந்தர்ப்பமும் கிடைத்தால் தப்பு செய்துவிடுவது ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இருக்கிறது. இதற்காக எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் குறை சொல்வது சரியல்ல.
ஊடகங்களை உன்னிப்பாக படித்தால் ஓன்று புரியும் அதாவது, பாதிரிகளின் பாலியல் சேட்டைகள் காரணமாக பாதிக்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்னவாகிறது என்பது தெரியாது. அந்த வகையில் தினமலரின் தைரியம் பாராட்டப்படவேண்டும்.
உ.பீஸோ
இப்ப தான் முதன் முதலா ஒரு கிரிச்சவப் பாதிரிக்க ,தண்டனையே கிடைத்துள்ளது. அதுவும் செய்தியாக வந்ததே பெரிய செய்தி. வேறு செய்தித் தாள்களிலோ. தொலைக்காட்சிகளிலோ வராது. ஹிந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தும் போலி சாமியார் என்றால் தான் செய்தி வரும் ஒரு.மணி நேரம் விவாதம் நடக்கும். அதுவும் மாற்றுத் திறனாளியை வன்கொடுமை செய்துள்ளான் .தூக்கு தண்டனையே பொருத்தம்.
இதை பற்றி கனியோ சோசப்போ குருமாவோ வாய் திறக்கவே இல்லைமேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை