அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை
சென்னை: தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ.888 கோடி ஊழலில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது.
ஈ.டி கடிதங்கள்
கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் ரூ.1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ.365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.
ரூ.2,300 கோடி ஊழல்
தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தனக்கு தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?
முதல்வருக்கு தெரிந்தே...
உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
Did you all notice the voice of stalin and nehru in a confused tone today.
வாங்கும் லஞ்சத்தில் பங்கு பிரிச்சதே சோனா முத்தன் தானே
பாஜக அனைத்து துறைகளிலும் நாட்டை முன்னேற்றியது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு அரசியல்வாதிக்கு கூட தண்டனை வாங்கி கொடுக்கவில்லை. அதற்கு வழக்கை சரிவர நடத்ததாத அதிகாரிகள் காரணமா அல்லது வார்த்தையில் மட்டும் கண்டித்து விட்டு வாழ்நாள் ஜாமீன் வழங்கும் சட்டம் காரணமா என தெரியவில்லை. பொது வெளியில் குற்றச்சாட்டு மட்டுமே கூறுவதால் அது நகைப்புக்கரியதாக ஆகிறது.
உண்மை - ஊழல் கட்சியான அ தி மு க, தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, எப்படி ஊழலை ப ஜ க ஒழிக்கும் ???
அ தி மு க விலிருந்து தி மு க விற்கு வந்த அணைத்து நபர்களும் ஊழல் பேர்வழிகள் -
Mr annamalai why u didnt file case against nayinar nagendran for worst speech publicly? Why you all are closing your mouth if your party leader means?
ஒரு திராவிடன் இன்னொரு திராவிடன் மீது வழக்குப் பதிவதா >>>>
திமுக கொள்ளையடித்த பணத்தில முக்கால் பங்கு வாங்கியதால் சட்டத்தை மதிக்காத திமுக அடிமை அயோக்கிய காக்கிகள் வழக்கு பதியவில்லை
ஐயோ இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மத்திய அரசு மாநிலங்களை ஒடுக்க பார்க்கிறது என்ற வாதத்துடன் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்டு இரண்டு ஆரிய வழக்கறிஞர்களைவைத்து வழக்கு போடுவார்கள்ள என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்களாம் கிறார்களாம்
இங்கு படித்து திறமையுள்ள மாணவர்களுக்கு அரசு பணியில் சேர தகுதியில்லை. பணம் இருந்தால் போதும் பல்கலை துணைவேந்தர் பதவியே விற்கப்படும்போது குடிநீர் வழங்கல் துறை எம்மாத்திரம். முனைவர் பாலகுருசாமி அவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் முன்னாள் அமைச்சரின் மருமகன் என ஒரே தகுதியுடன் பதிவாளர் தகுதி இல்லாத ஒருவர் பதிவாளராக இருக்கிறார் என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களும் வாங்க பழகிவிட்டார்கள், அவர்மட்டும் எப்படி செலவு செய்வார் இப்படி ஏதாவது சம்பாதித்தால்தான் உண்டு என கட்சிக்காரர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தன் மகன் உரிமை பறிபோகிறது என தெரியாமல் தமிழர்கள் உள்ளார்கள். திரு அண்ணாமலை மற்றும் சீமான் போன்றோர்தான் தமிழகத்துக்கு சிறு நம்பிக்கை தருகிறார்கள்
3000 கோடி ஊழல் செய்து சொத்து சம்பாதித்து பெங்களூருவில் பணம் முதலீடு செய்ததாக உம்மீதும் புகார் உள்ளதே?
போய் கேசு போடு பிடிக்கிட்டா
பழைய மாணவர்கள் அடித்து பங்கு கொடுக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் சிக்கினால் அது அவர்கள் பாடு, அமலாக்கத்துறை பாடு என்று விட்டு விடுவார்.மேலும்
-
மேற்கு வங்க அரசு - தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கை இல்லை! எஸ்.ஐ.ஆர்., வழக்கில் மாவட்ட நீதிபதிகள் மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரம்ஜான் சிந்தனைகள் -3
-
அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
சரியானவர்களிடம் விளம்பரம் சேர்கிறது
-
ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி
-
மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு