சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

45

சென்னை: ''சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்'' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 5 நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியை அடுத்த 2 மாதங்களில் மீண்டும் வந்து இன்னும் கூடுதலாக, வேகமாக வந்து பணியை தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழக மக்களை போலவே எனக்கும் இருக்கிறது. எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிக சிறப்பாக செய்ததாக நான் நினைக்கிறேன்.

பொறுமை, நிதானம்



வரலாறு சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன் இருந்த பலரும் இன்று இல்லாவிடடாலும் அவர்கள் அனைவரும் போற்றப்படக் கூடியவர்கள் தான். ஆட்சி சக்கரத்தை உயர்த்தி பிடிப்பது மகத்தானது. பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, கடமை தவறாமை ஆகிய பண்புகளை நானும் கடைபிடித் திருக்கிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பக்கையே நாளைய ஆட்சியாளர்களாக எங்களை தொடர செய்யப்போகிறது. 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தால் இந்த முதல்வர் ஸ்டாலின் இன்னும் வலிமை பெற்று தமிழகத்தை இன்னும் ஏற்ற பெற வைப்பேன்.

மக்களுக்கு நன்றி



நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தை நான் பெற்றுள்ளேன். எதனையும் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றுள்ளேன். 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்று பிரித்து பார்க்காமல் செயல் ஆற்றியுள்ளேன். மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றி.

தமிழக கவர்னருடன் எனக்கு எந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். தமிழக பண்பாட்டை மனதில் கொண்டு தமிழக கவர்னருக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் சாதனைகளுக்கு தோளோடு தோள் நின்ற தோழமை கட்சிகளுக்கும், துணை முதல்வர் உதயநிதி, சபாநாயகர், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இபிஎஸ்க்கு நன்றி




குறைகளை சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்கு சிறகுகளை தரக்கூடியவர்கள். அரசுக்கு தக்க யோசனைகள் கூறுவதிலும், குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் கண்ணியமான முறையை கடைபிடித்து ஒத்துழைப்பு நல்கிய, எதிர்க்கட்சி தலைவர் இன்றைக்கு வரவில்லை. அவருக்கும், மற்றக்கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன். எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம் என்ற நிலையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மீண்டும் வெல்வோம். ஆட்சிக்கு வந்து தமிழக நல திட்டங்களை தொடர்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


@block_G@

மீண்டும் திமுக ஆட்சி!

சென்னை சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மன நிறைவோடு 5 வருடம் ஆட்சியில் இருந்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். முழு மனநிறைவு அடைந்துள்ளேன். மீண்டும் திமுக தலைமையில் தான் ஆட்சி அமையும். அது உறுதி. விரைவில் சந்திப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.block_G
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்


சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.



வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement