குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., போட்டி?

சென்னை மாகாணமாக இருந்த போது, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில், கடந்த 1962ம் ஆண்டு குறிஞ்சிப்பாடி (தனி) சட்டசபை தொகுதி உருவானது.

தொகுதி மறு சீரமைப்பில் கடந்த, 1977ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. கடந்த 1980ம் ஆண்டு முதல், கடந்த 2021ம் ஆண்டு வரை, நடந்த சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., 9 முறை போட்டியிட்டது. இதில், 4 தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

வரும் சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., நேரடியாக போட்டியிட அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

அந்த அடிப்படையில், அமைச்சர் பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற இத்தொகுதியில் அ.தி.மு.க., மீண்டும் போட்டியிடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க., வினர் தேர்தலுக்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement