மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி, வாலிபர் இறந்தார்.

விருத்தாசலம் ஆலடி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலசுப்ரமணியன், 29; இவர் அதே பகுதியில் சிக்கன் சென்டர் நடத்தி வந்தார்.

நேற்று வழக்கம்போல், கடையை திறந்து, கோழிகளை மிஷினில் போட்டு சுத்தம் செய்ய முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில், அவர் துாக்கி எறியப்பட்டவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தாய் உமா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement