தமிழை அழிக்க நினைப்பது தி.மு.க.,; காக்க நினைப்பவர் மோடி
காரைக்குடி: தமிழ் பாடத்தை தி.மு.க., கட்டாயமாக்கவில்லை. ஆனால் மாநில மொழியை கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி. தமிழை அழிக்க நினைப்பது தி.மு.க., காக்க நினைப்பது பிரதமர் மோடி, '' என, காரைக்குடியில் பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பா.ஜ., சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 20 ஆயிரம் தெருமுனைப்பிரசார கூட்டங்கள் நடக்கவுள்ளன. பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர். இந்தாண்டு பட்ஜெட்டை வெறுமனே வரவு செலவு கணக்காக இல்லாமல் வளர்ச்சிக்கான ஆவணமாக உருவாக்கினார்.
சிறிய பூக்கடைகளில் கூட இன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. பார்லி.,யில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து பேசும் போது காங்.,கை சேர்ந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சிரித்தார். இன்று உலகளவில் இந்தியாவில் தான் பல மில்லியன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். நம்மை பார்த்து 14 நாடுகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றன. அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலும் முக்கிய பொருளாக உள்ள 'சிப்' தயாரிப்பில் சீனா முதலிடமாக உள்ளது. இதை மாற்றுவதற்கு 'சிப்' தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்றும் வகையில் மத்திய அரசு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய காங்., ஆட்சி முடிவில் 300 ஸ்டார்ட் அப்கள் இருந்தது. ஆனால் இன்று 2.60 லட்சம் ஸ்டார்ட் அப்கள் உள்ளது.
இது திராவிட மாடல் ஆட்சி அல்ல; நாடக மாடல் ஆட்சி. அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்குவது தான் திராவிடம் என்கிறார்கள். ஆனால் கட்சியில் கூட சம வாய்ப்பு வழங்குவதில்லை.
ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. தி.மு.க., வின் ஆட்சிக்காலம் முடிய போகிறது. தமிழகத்தில் எந்த தவறு நடந்தாலும் மத்திய அரசை குறை சொல்கின்றனர். சரியாக நடந்தால் திராவிட மாடல் என்று கூறுகின்றனர். மோசமான திராவிட மாடலை ஒழிப்பதே எங்கள் லட்சியம். மத்திய அரசின் திட்டங்களில் வைக்கப்படும் பெயர்கள் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் கருணாநிதியின் பெயர் வைக்கும் போது ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.
மேலும்
-
ஏஐ துறையில் இந்தியா காட்டும் மகத்தான நம்பிக்கை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் பாராட்டு
-
மூன்று குட்டிகளை ஈன்ற காமினி: சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
-
காசா அமைதி வாரியத்தில் போப் சேர மாட்டார்: வாடிகன் அறிவிப்பு
-
சீனாவில் தொடரும் சோகம்; பட்டாசு கடை வெடிவிபத்தில் 12 பேர் உடல்சிதறி பலி
-
மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு
-
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை