விளையாட்டு போட்டியில் மாணவர்கள் அசத்தல்
தேனி: தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ., மைதானத்தில் மாவட்ட அளவிலான தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் துவக்கி வைத்தார்.
சின்னமனுார் வ.உ.சி., ஐ.டி.ஐ., கபடி, வாலிபால் போட்டிகளில் முதலிடம் வென்றது. கபடியில் தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ., வாலிபால் போட்டியில் செல்லம்மாள் ஐ.டி.ஐ., இரண்டாமிடம் வென்றன.
இது தவிர 100 மீ., 200 மீ., ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு சங்க தலைவர் நம்பெருமாள் சாமி, ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி, சங்க பொதுச்செயலாளர் மகேஷ், துணைத்தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் தலைமையில் ஆசிரியர்கள் போட்டிகள், விழாவை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏஐ துறையில் இந்தியா காட்டும் மகத்தான நம்பிக்கை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் பாராட்டு
-
மூன்று குட்டிகளை ஈன்ற காமினி: சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
-
காசா அமைதி வாரியத்தில் போப் சேர மாட்டார்: வாடிகன் அறிவிப்பு
-
சீனாவில் தொடரும் சோகம்; பட்டாசு கடை வெடிவிபத்தில் 12 பேர் உடல்சிதறி பலி
-
மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு
-
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை
Advertisement
Advertisement