பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி தர்ணா

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 3 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாத்திரங்களில் கரண்டியால் தட்டி ஒலி எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் இரைச்சல் மிகுந்து காணப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனுஷ் கோடி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், தேன்மொழி, சுப்புராஜ், தெய்வேந்திரன், சுமதி, விமலா, ராதிகா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement