மாலத்தீவு கட்டமைப்புக்கு வலுவான ஆதரவு: மீண்டும் உறுதி அளித்தது இந்தியா

மாலி: மாலத்தீவு கட்டமைப்பு, சமூக நலனுக்கு வலுவான ஆதரவு அளிப்பதாக இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.

மாலத்தீவின் பாவ்ப்பு மற்றும் தாலு பவளத்தீவுகளில் ராஜ்ஜே போக்குவரத்து இணைப்பு சேவைகள் துவக்க விழா நடைபெற்றது.
துவக்க விழாவில் இந்திய துாதர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

சமூகங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் திட்டங்களை நிறுவுவதில் மாலத்தீவை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, மாலத்தீவிற்கான 12 அதிவேகப் படகுகளில் முதலாவது படகை இந்தியா வழங்கியது. இது தீவுக்கூட்டம் முழுவதும் கடல்வழி இணைப்பை வலுப்படுத்தும் 'ராஜ்ஜே டிரான்ஸ்போர்ட் லிங்க்' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


இந்தப் படகுத் திட்டம் உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.55.3 கோடி (100 மில்லியன் மாலத்தீவு ரூபியா) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 3,300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
'பீஷ்ம்' எனப்படும் அவசரகால மருத்துவக் கியூப்கள் மற்றும் கல்வி வசதிகள்.
அட்டு நகரில் கடலோரப் பாதுகாப்பு மற்றும் சாலைக் கட்டமைப்புப் பணிகள்.


இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முதலிடம்" கொள்கை மற்றும் "மகாசாகர்" தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு அமைகிறது.இவ்வாறு பாலசுப்ரமணியம் கூறினார்.

Advertisement