'சூப்பர்-8' சுற்றில் பாக்., * நமீபியாவை சாய்த்தது
கொழும்பு: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது. நேற்று தனது கடைசி போட்டியில் நமீபியாவை 102 ரன் வித்தியாசத்தில் சாய்த்தது.
இலங்கையின் கொழும்புவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், நமீபிய அணிகள் மோதின. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான், 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
பர்ஹான் சதம்
பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்ஜதா பர்ஹான், சைம் அயுப் (14) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் சல்மான் அகா, 23 பந்தில் 38 ரன் எடுத்தார். கவாஜா (5) நிலைக்கவில்லை. அடுத்து இணைந்த பர்ஹான், ஷதாப் கான் ஜோடி வேகமாக ரன் குவித்தது. பர்ஹான், 57 பந்தில் 'டி-20' அரங்கில் தனது முதல் சதம் அடித்தார்.
தவிர, 'டி-20' உலக கோப்பையில் சதம் அடித்த, இரண்டாவது பாகிஸ்தான் வீரர் ஆனார் பர்ஹான். முன்னதாக 2014ல் அகமது ஷேசாத் சதம் (எதிர்-வங்கதேசம்) அடித்து இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 199/3 ரன் குவித்தது. பர்ஹான் (100), அயுப் (36) அவுட்டாகாமல் இருந்தனர்.
உஸ்மான் அபாரம்
நமீபிய அணிக்கு ஸ்டீன்கேம்ப் (23), அலெக்சாண்டர் (20) என இருவர் மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. நமீபிய அணி 17.3 ஓவரில் 97 ரன்னில் சுருண்டு தோற்றது. உஸ்மான் தாரிக் 4 விக்கெட் சாய்த்தார்.
இதையடுத்து 4 போட்டியில் 3 வெற்றி (1 தோல்வி) பெற்ற பாகிஸ்தான் (6 புள்ளி), பட்டியலில் 2வது இடம் பெற்று, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.
மேலும்
-
வி.ஏ.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
-
அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனம் குப்பை சேகரிப்பு பணியில் தொய்வு
-
திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
-
'தமிழ்நாடு நமதே' பா.ஜ. பிரசாரம்
-
சாலைப்பணிக்கு பூமி பூஜை
-
துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் யாரால் முடங்கியது? அமைச்சருடன் பழனிசாமி வாக்குவாதம்