தகவல் சுரங்கம்
உலகின் உயரமான பாலம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மாவட்டத்தில் 'கார்துங் லா' கணவாய் உள்ளது. இது சுற்றுலா பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு டிராஸ், சுரு ஆறுக்கு இடையே 'கார்துங் லா பெய்லி' பாலம் உள்ளது. இது உலகின் உயரமான இடத்தில் (சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 18,380 அடி) கட்டப்பட்ட பாலம் என அழைக்கப்படுகிறது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ராணுவ வாகனங்கள் செல்வதற்காக 1982ல் இந்திய ராணுவம் இதை அமைத்தது. இதன் நீளம் 98 அடி. லடாக் யூனியனில் இது போல பல 'பெய்லி' வகை (இரும்பு) பாலங்களை ராணுவம் அமைத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement