'தமிழ்நாடு நமதே' பா.ஜ. பிரசாரம்

அவிநாசி: அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு சக்தி கேந்திரா சார்பில், மேற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில், 'நாளை நமதே... தமிழ்நாடு நமதே' என்ற தெருமுனை தேர்தல் பிரசாரம் நடந்தது.

அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள ஸ்ரீபாலமுருகன் கோவில் அருகே நடந்த பிரசாரத்துக்கு, தெற்கு சக்தி கேந்திரா பொறுப்பாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் முன்னிலை வகித்தார்.

கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, சட்டமன்ற பொறுப்பாளர் கதிர்வேல், அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் தம்பி ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

Advertisement