திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா
சென்னை: சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. 10 ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக நிருபர்களிடம் பிரேமலதா கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மறுபக்கம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்காமல், திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினரிடம் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். எங்கு அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பேரம் பேசி வருவதாக, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வெளிப்படையாக இது பற்றி தேமுதிகவை குறை கூறி வந்தனர்.
விஜயகாந்த் பெயரை பிரேமலதா கெடுப்பதாகவும், கட்சியை விலை பேசி வருவதாகவும் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தார்.
சட்டசபை தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது. எத்தனை தொகுதிகள் தேமுதிகவுக்கு கிடைக்கும்; ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.
திமுகவுடன் கூட்டணி எதற்கு?
இது குறித்து நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: யாருடன் கூட்டணி அமைக்க போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கான விடை இன்று அறிவிக்கப்பட்டது.
இன்று முதல் தேமுதிகவும், திமுகவும் கூட்டணியை உறுதி செய்து இருக்கிறது. இந்த கூட்டணி தொண்டர்களின் விருப்பப்படி வைக்கப்பட்டு உள்ளது. திமுகவுடன் 2016ம் ஆண்டு அமைய வேண்டிய கூட்டணி. இப்போது அமைந்ததில் மகிழ்ச்சி. 10 ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் விருப்பம் நிறைவேறியுள்ளது.
எந்த தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பது எல்லாம் இதுக்கு பிறகு குழு அமைத்து முடிவு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திமுகவுடன் முதல்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களும், கட்சியினரும் மிக சந்தோஷமாக இந்த கூட்டணியை வரவேற்று இருக்கிறார்கள்.
இக்கூட்டணி 200க்கும் மேல் தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இன்று கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. உங்களது சந்தேகம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
என்னென்னமோ நலத்திட்டங்கள் செய்தோம் என்று பேசியவர் இன்று தோல்வியின் பயத்தில் புது கட்சியை சேர்த்துள்ளார்..மக்கள் முடிவில் தெளிவாக இருக்கிறார்கள்..
விஜயகாந்தை கேவலப்படுத்திய வடிவேலுவும், பிரேமலதாவும் இணைந்து,
தீய மு க வின் வெற்றிக்காக உழைப்பார்கள்
மகா கேவலம்... அவலத்தின் உச்சம். இந்தப் பெண்ணின் கணவர் ஆத்மா நிச்சயம் தூற்றும். மக்கள் கண்டிப்பாக நிரகரிப்பர். Just wait and see maa
தி.மு.க.விற்கு நேர் எதிரியாக கட்சியை ஆரம்பித்த விஜயகாந்திற்கு இது ஒருபெரிய அடி அவர் இருந்திருந்தால் தற்கொலையே செய்துகொண்டிருப்பார் போயும் போயும் விவஸ்தை கெட்டுப்போய் இந்த அம்மா இப்படி கட்சியை பாழாக்க வேண்டாம் உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி இந்த அம்மா இவர் தம்பி இரண்டு மகன்களை தவிர வேறு யாருமே இந்த கட்சியில் இல்லை ஆனால் இவர்கள் மட்டும் கட்சியில் சேர்ந்தவுடன் ஒரு ராஜ்யசபபா பதவி பத்து அசெம்பிளி சீட்டுகள் ஆட்சியில் பங்கு எல்லாமே இந்த மாவிற்கு தான் என்ன என்ற நினைப்பே இல்லாதவர் சீக்கிரமே இதனுடைய பலனை அனுபவிப்பர் பிறகு தான் செய்தது மகாபெருந்தவாறு என்று எண்ணி எண்ணி ஏங்குவார் அப்போது காலம் கடந்துவிடும் என்ன செய்வது விதியின் விளையாட்டு இதுதான் பாவம் விஜயகாந்த்
தி.மு.க.விற்கு நேர் எதிரியாக கட்சியை ஆரம்பித்த விஜயகாந்திற்கு இது ஒருபெரிய அடி அவர் இருந்திருந்தால் தற்கொலையே செய்துகொண்டிருப்பார் போயும் போயும் விவஸ்தை கெட்டுப்போய் இந்த அம்மா இப்படி கட்சியை பாழாக்க வேண்டாம் உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி இந்த அம்மா இவர் தம்பி இரண்டு மகன்களை தவிர வேறு யாருமே இந்த கட்சியில் இல்லை ஆனால் இவர்கள் மட்டும் கட்சியில் சேர்ந்தவுடன் ஒரு ராஜ்யசபபா பதவி பத்து அசெம்பிளி சீட்டுகள் ஆட்சியில் பங்கு எல்லாமே இந்த மாவிற்கு தான் என்ன என்ற நினைப்பே இல்லாதவர் சீக்கிரமே இதனுடைய பலனை அனுபவிப்பர் பிறகு தான் செய்தது மகாபெருந்தவாறு என்று எண்ணி எண்ணி ஏங்குவார் அப்போது காலம் கடந்துவிடும் என்ன செய்வது விதியின் விளையாட்டு இதுதான் பாவம் விஜயகாந்த்
தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்தால் கூடுதலாக 1000 ஓட்டு கிடைத்திருக்கும். திமுகவிடம் சேர்ந்ததால் 500 ஓட்டு அதிமுகவிற்கு குறைந்து 400ஓட்டு தவெக சீமான் பக்கம் போயி 100ஓட்டு திமுகவிற்கு வரும். அம்மஞ் சல்லிக்கு புண்யமில்ல எனினும் அதிமுக கூட்டணிக்கு 500 ஓட்டுகளை தன் சாணக்கியதனத்தால் குறைத்துள்ளார் முகஸ்
பெரிய பெட்டி நிறைய கிடைச்சாச்சு இன்னைக்கு ராத்திரி ஒவ்வொரு நோட்டாக எண்ணுவாங்க ஆக இன்னைக்கு சிவராத்திரி தான்
இதற்கு பெயர் தான் வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டுவிட்டு, இடது பக்கம் வண்டியை திருப்புவது ஆகும். அதாவது ஈஸா யோகா மைய சிவராத்திரி மையத்தில், மய்யமாக முக்காடு போட்டு உட்கார்ந்து பூஜை, புனஸ்காரங்களில் கலந்து விட்டு, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்களிடம் இன்முகத்துடன் கலந்துரையாடிவிட்டு, மறுநாள் தி.மு.க வில் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பெரிய அல்வா கொடுத்து விட்டார். கில்லாடி பெண். எனினும், சனாதனத்தை பின்பற்றுபவர் என்பதால், இவர் நமது நண்பர் தான் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி வழியனுப்புவோம். அது தானே நாகரிகம்
ஒரு தொகுதியில் ரெண்டு பேர் கூட இருக்க மாட்டார்கள். இந்த வெங்காயத்தை நூறு கோடிக்கு புத்திசாலித்தனமாக பிரேமலதா ஸ்டாலினிடம் விற்றுவிட்டார்.
மற்ற அரசியல் தலைவர்களை போலவே, தி.மு.க.வோடு கூட்டணி அமைந்தது தொண்டர்களின் விருப்பம் என வாய் கூசாமல் பொய்யை பிரேமலதா கூறி அவராகவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இது தொண்டர்களின் விருப்பம் என்பது உண்மையானால் தி.மு.க. ஒதுக்கும் அணைத்து தொகுதிகளிலும் விஜய்காந்த் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் உறுப்பினர்- தொண்டர்களாக வாழ்க்கையை தியாகம் செய்து வருபவர் களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக பிரேமலதா மற்றும் அவரது மகன் இருவருக்குமே எந்த தொகுதியை ஒதுக்கி கொள்ள கூடாது. செய்வாரா?மேலும்
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
-
வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்
-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்
-
ராமநாதபுரத்தில் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை
-
வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
-
காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்