இறங்கிய வேகத்தில் தங்கம் விலை ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 17), தங்கம் விலை கிராமுக்கு, 120 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்றைய நிலவரம்
நேற்று (பிப்ரவரி 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 270 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்பே இல்லைமேலும்
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
-
வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்
-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்
-
ராமநாதபுரத்தில் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை
-
வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
-
காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்