தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!
நமது நிருபர்
தள்ளாத வயதிலும், தமிழுக்காக உழைத்த டாக்டர் உ.வே.சாமிநாதையரின் 171வது நாளான இன்று (பிப்ரவரி 19), அவர் ஆற்றிய பணி குறித்து ஓர் சிறப்பு அலசல்.
உலகெங்கும் வாழும் தமிழர்களால் 'தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதையர். 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ல் தஞ்சாவூர் மாவட்டத்தின், சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவர் 17 வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
உழைப்பு
சென்னை மாநில கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.
உ.வே.சா., மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். 'உ.வே.சா., பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று அவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணியை நினைவு கூர்வோம். இவரது பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நூல் வெளியீடு
தமிழுக்காக உ.வே.சாமிநாதையரின் பணி இன்று நிலைத்திருக்கிறது. நகைச்சுவையாக பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே 'சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்' எனும் நூலாக வெளியிடப்பட்டது.
உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு உள்ளது. 1942ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
@block_P@
இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்த தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம் இன்று.
தமிழின் தொன்மையையும், செழுமையையும், மரபையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய அவரின் அர்ப்பணிப்பு ஒப்பற்றது. தமிழ் மொழியின் காவலரான மாமனிதர் உ.வே.சாமிநாதையரின் புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_P
கண்டதும் கேட்டதும்
உ.வே.சா பிறந்தநாளை முன்னிட்டு, ''கண்டதும் கேட்டதும்'' என்ற தலைப்பில் இலவசமாக இணையத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தகம் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
பொதிய மலை பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெல்லாம், புலவர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றி துலங்குவாயே!
தமிழ் இருக்கும் வரை திரு உ.வே.சா அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் என்று பாரதியார் பாடி உள்ளார்! இதை விட நாம் சொல்ல என்ன இருக்கிறது? இருந்தமிழே உன்னால் இருந்தேன் நான் இமையோர் விருந்தமிழ்தமும் வேண்டேன் என்று தமிழுக்காக வாழ்ந்த மகா மகோபாத்தியாயருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல!
மகாமகோபாத்யாய உ. வே. சாமிநாதய்யர்.
"செம்பரிதி ஒளிபெற்றான்பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்ததுஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே."
பாரதி
உ.வே.சா பிறந்தநாள் இன்று
பிப்ரவரி 19
What Tamizhi kaatha thalaimaganaa. Athuvum oru Iyeraaa. Dravidians and Kalaignar are the only people who did everything for Tamil. No one should take credit. Beware
முடியாது. எற்றுக் கொள்ள முடியாது. இவர் அய்யர். இது ஈர வெங்காய மண்...
தமிழை காத்த தலைமகன் ....அவரின் ஆத்மா எண்ணற்ற தமிழ் மொழி காவலர்களை போல தமிழுடன் பின்னி பிணைந்து உள்ளது ....அவரின் பிறந்த தினத்தன்று அவரை நமஸ்கரித்து நினைவு கூறுவதில் புத்துணர்வு அடைகிறேன் ...
வாழ்த்தி வணங்குகிறோம் ...
ஒத்துக்குவே மாட்டேன் ..... தமிழுக்காக பாடுபட்டது கோள்மால்புர தாத்தாதான் ....
எந்த ஒரு லாப நோக்கமும் இல்லாமல், மாட்டு வண்டியில் சென்று, பல தொலைவு நடந்து போய், இவர் ஒவ்வரு கிராமத்திற்கும் சென்று ஓலை சுவடிகளை சேகரித்த விதம் வியக்கவைக்கும். சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, குறுந்தொகை, புறநானூறு, பரிபாடல், போன்ற பல நூல்களை அவர் சேகரித்து, வெளியிடாமல் இருந்து இருந்தால் அவை அழிந்து போய் இருக்கும். கரிகால் பெருவழுதியையும், அதியமானையும், ஒவ்வையாரையும் வரலாறு உண்மை என்று நிரூபித்த பெருமானார் இவர்.
திராவிடம் அவரை சாதி வெறியால் மறைக்க பார்த்தது. ஆனால் சூரிய ஒளியை யார் தடுக்க முடியும்? தமிழே ஒழுங்காக பேச தெரியாத, மற்றும் காட்டு மிராண்டி பாஷை என்று சொன்ன வெங்காயத்திற்கு எதிராக போலி திராவிடம் இவரை எப்படி ஒப்பிட முடியும்.
இந்தளவுக்கு தமிழுக்கு யாராவது தொண்டு செய்தார்களா. இன்று தமிழ் பட்டொளி வீசி பாரெங்கும் பரவ இவர் பணி அடிக்கல். இவருக்குரிய கெளரவம் பெருமை கிடைத்ததா. பாரதியை போல் இவரும் ஓரம் கட்டப்பட்டார்.
நன்றிமேலும்
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
-
வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்
-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்
-
ராமநாதபுரத்தில் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை
-
வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
-
காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்